உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(276

அப்பாத்துரையம் - 35

31. சென்ற பொருள் மீளும், சென்ற காலம் மீளாது

பொருள் முயற்சியில் முனைந்த வணிகர் ஒருவர் மதுரை யில் பெரிய கடை ஒன்று வைத்திருந்தார். நாட்டுப்புறத்துச் செல்வர் ஒருவர் அவர்கடையில் வந்து ஒரு பொருளை வாங்க எண்ணி விலை கேட்டார். கடை வழக்கப்படி பையன் அதன் கண்டிப்பான விலை ஒரு வெள்ளி என்று முதலிலேயே கூறிவிட்டான்.வாதாடியே கொடுக்கல் வாங்கல் செய்து பழகிய செல்வர் இரண்டு நாழிகை பையனுடன் வாதாடியும் மறுவிலை பெறாமையால் வணிகரிடமே நேரில் வந்தார். வணிகர் அப்போது தம் கணக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவ்வேலையை ஒதுக்கி வைத்து விட்டு வந்தவரிடம், 'தங்களுக்கு என்ன வேண்டும்?' என்றார்.

செல்வர்: இப்பொருளின் விலை ஒரு வெள்ளியென்று ரண்டு நாழிகையாக உங்கள் பையன் சாதிக்கிறான். இதைக் குறைத்துக்கொடுக்கக் கூடாதா?

வணிகர்: இப்போது இதன் விலை ஒன்றரை வெள்ளி. செல்வர்: என்ன ஐயா, பையன் கூறியதைவிடக் கூடுதல் கூறுகிறீரே?

வணிகர்: ஆம்; எங்கள் பொருளுக்கு ஒரே விலைதான். ஆனால் நீங்கள் பையனை நெடுநேரம் பேச வைத்துவிட் டீர்கள். அதற்காக அரை வெள்ளி தரவேண்டும். என்னையும் பேச வைத்தால், இன்னும் அரை வெள்ளி சேர்த்து இரண்டு வெள்ளி தரவேண்டும்.

செல்வர்: ஏன் ஐயா! பேசுவதற்குக் கூடவா பணம்?