உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

அப்பாத்துரையம் - 35

எல்லாத் துன்பங்களிலிருந்தும் அவள் உடல் விடுதலை

பெற்றது.

செல்வி வாணகை உண்மையில் வேறெங்கும் செல்ல வில்லை. வேனில் மாளிகையின் உள்ளேயே சென்றிருந்தாள். அங்கே யாராவது இருந்தால், தண்ணீரும் சிறிது உணவும் பெறலாமே என்ற ஆவல்தான் அவளைத் தூண்டிற்று. தோட்டத்தில் யாரையும் காணவில்லை. மாடத்தின் வாயில் பொருந்தச் சார்த்தியிருந்தது. ஆயினும் கையைத் தட்டினவுடன் அது தானாகவே பூட்டிக் கொண்டது. அதைத் திறக்கும் வகை அவளுக்குத் தென்படவில்லை.

தூண்டின.

இருந்த போதிலும் பசியும் விடாயும் அவளை மேலும் உள்ளே செல்லத் உள்ளேயும் யாரையும் காணவில்லை. உயிரோவியம் போன்ற ஓர் உடல்தான் கட்டிலில் கிடந்தது. அதுவே கடம்பன் உடல். அதனருகே இனிய குடிநீர் வகைகளும், உண்டி வகைகளும் இருந்தன. அவள் வேறொன்றும் நினைக்க நேரமில்லை, குடிநீரில் சிறிது குடித்தாள். உணவில் சிறிது அருந்தினாள். மயங்கிச் சோர்ந்து சாய்ந்தாள்.

அவள் விழிக்குமுன் இரவாயிற்று. இளவரசன் விழித்துக்கொண் டான். அருகே ஓர் எழிலோவியம் சாய்ந்து கிடப்பது கண்டான். அதன் அழகு அவன் கண்ணைப் பறித்தது. அதையே அவன் பார்த்தவண்ணம் நின்றான்.

வாணகை விழித்தபோது, அவள் தன்முன் கடம்பனைக் கண்டு திகைத்தாள்.

முதலச்சம் தீர்ந்தபின் வாணகை தன் நிலைமையை விளக்கினாள். உணவு நீர் வகைகளை எடுத்து உண்டதற்காக மன்னிப்புக் கோரினாள்.கடம்பன் அவளை மேலும் உண்ணும்படி வற்புறுத்தினான். னான். ஆனால், தாயின் நினைவு அவளுக்கு எழுந்தது. அவனிடம் இணக்கம் பெற்று, விரைவில் வருவதாகக் கூறி, சிறிது உணவுடனும் நீருடனும் சென்றாள்.

தாய் கிடந்த நிலைகண்டு அவள் கதறினாள்; துடித்தாள்; தன் தனிமையை எண்ணி உருகினாள். பின் தாயுடலைச் சுமந்த வண்ணம் அவள் தோட்டத்திற்குள் நுழைந்தாள்.