உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(278) ||

அப்பாத்துரையம் - 35

32. சிறியார் சிறு பிழையும், பெரியார் பொறையும்

திருநெல்வேலி வட்டத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இசையரங்குகள் நடத்திப் பொருளீட்டி வந்தான். பொருள் வருவாயை மிகுதிப்படுத்த அவன் கையாண்ட முறைகள் பல. அவற்றுள் ஒன்று அவன் வெளியிட்ட துண்டறிக்கையில் அவன், தன்னை இசைவாணராகிய மணவாள நம்பியின் மாணாக்கன் என்று குறிப்பிட்டுக் கொண்டதாகும். இக்குறிப்பு அவனுக்குப் பலர் நட்பையும் பாராட்டையும் தந்து மிகுதியான பொருள் வருவாயையும் உண்டு பண்ணவே அவன் எங்கும் இச்சூழ்ச்சியைக்

கையாளலானான்.

மணவாள நம்பியின் ஊர் திருவனந்தை என்று அறியாத அவ்விளைஞன், அங்கும் இத்தகைய விளம்பரமே செய்திருந் தான். அவ்வூரார் ஒருவர் தற்செயலாக “நீர் மணவாள நம்பியின் மாணவராயிருக்கிறீரே, அவர் ஊரில் அரங்கு நடத்தும்போது அவரையும் அழைக்க வேண்டாமா?" என்றார்.

ளைஞ்

எதிர்பாராத இவ்வுரையைக் கேட்டதும் னுக்குப் பெருங்கவலை ஏற்பட்டது. எங்கே தன் 'குட்டு' வெளிப்பட்டுத் தன் பிழைப்புக்குக் கேடு வருமோ என்று அவன் அஞ்சினான். ஆயினும் ஒருவாறு உளந்தேர்ந்து அவன் மணவாளநம்பியின் இல்லமுசாவி அங்கே சென்று அவரிடம் தன் ஏழ்மை நிலை, தன் முயற்சி ஆகியவற்றைக் கனிவுடன் எடுத்துரைத்து இறுதியில் பிழைப்பை எண்ணித் தான்செய்த சிறு பிழையை வெளியிட்டுத் தன்னைப் பொறுத்து ஆதரிக்குமாறு மன்றாடினான்.

முதுமையால் உடல் தளர்ச்சியுற்றிருந்த மணவாள நம்பி புன்முறுவலுடன், 'சரி, அரங்கில் பாடப்போகும் பாடலைக்