உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

295

கூட்டத்தில் இருந்த ஒருவன், "ஆட்டுக்கறி எளிதில் செரிக்கமாட்டாது. செரிப்பதற்குச் சாராயம் சாப்பிட வேண்டும். சாராயமும் ஒரு புட்டி வாங்கிக்கொண்டு போ' என்றான்.

மற்றொருவன், “ஆட்டுக்கறி சாராயம் முதலியன சாப் பிட்டால் காமவெறி உண்டாகும். விலைமாதரையும் அழைத்துப்போ" என்றான்.

வேறொருவன், "விலைமாதர் கூட்டுறவால் நோயுண் டாகலாம். அப்பொழுது நோய் தீர்ப்பதற்கு மருத்துவர் உதவி வேண்டும் மருத்துவரையும் அழைத்துப்போ” என்றான்.

இன்னொருவன், "மருத்துவர் மருத்துவத்தால் ஆள் பிழைக்காமல் எமலோகப் பயணம் ஆனாலும் ஆகக்கூடும். ஆகவே பிணம் எடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளையுஞ் செய்து கொண்டு போ” என்றான்.

அவ்வளவில் வேலையாள், ஆட்டுக்கறியும், சாராயமும் வாங்கிக்கொண்டு, விலைமாதர், மருத்துவர் ஆகியோரிடஞ் சென்று, "தலைவர் வரச்சொன்னார்" என்று கூறிவிட்டுப் பிணமெடுப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாவற்றையுஞ் செய்து கொண்டு சென்றான்.

வேலையாள் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் எல்லோரும் செல்வர் வீட்டை அடைந்தார்கள். விலைமாது போய்ச் செல்வரைக் கண்டு கும்பிட்டாள். மருத்துவர் வந்து செல்வரைப் பார்த்து “உடம்புக்கு என்ன?” என்று கேட்டார். பறையர், வண்ணார், நாவிதர் முதலியவர்களும் வீட்டு வாசலுக்கு வந்தார்கள்.

இவர்களையெல்லாம் காணவே செல்வனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லோரையும் பார்த்து, “என்ன செய்தி?” என்று கேட்டான். எல்லோரும் வேலையாள் வரச்சொன்ன தாகத் தெரிவித்தார்கள். வேலையாளைக் கூப்பிட்டு, "இவர் களையெல்லாம் எதற்காக வரச்சொன்னாய்?" என்று கேட்டான். அதற்கு வேலையாள், "இன்றைக்கு நீங்கள் சொன்னபடியே செய்தேன். ஒரு காரியத்தைச் செய்தால் அதற்குப் பிறகு ஏற்படக்கூடிய பலன்களையுந் தெரிந்து காரியஞ்