உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(294

அப்பாத்துரையம் - 35

42. இன்றைக்கு நீங்கள் சொன்னபடி செய்தேன்

ஒரு செல்வனிடத்தில் ஒரு வேலையாள் இருந்தான். அவ்வேலையாள் கூர்மையான அறிவுள்ளவன் அல்லன். ஒரு வகையான மடையன். செல்வன் அவனை அடிக்கடி கண்டித்து அறிவுரைகள் கூறுவான். ஒரு நாள் அவனைப் பார்த்து, எக்காரியத்தைச் செய்தாலும் அக்காரியத்திற்குப் பின் ஏற்படக்கூடிய பலனையும் ஆராய்ந்து பார்த்து அதற்குத் தக்கபடியாகக் காரியங்களைச் செய்வது தான் அறிவாளிக்கு அழகு” என்று அறிவுரைகள் கூறினான்.

66

பிறகு அவ்வாளைப் பார்த்து, “எனக்குச் சில நோய்கள் இருக்கின்றன. அதற்கு ஆட்டு ஊனைத் தின்றால் நோய் நீங்கிவிடும் என்று மருத்துவர் சொல்லுகிறார். நான் ஊன் உண்ணாத சைவன் என்பது உனக்குத்தான் தெரியுமே. நீ மிக மறைமுகமாக ஆட்டுக் கறி வாங்கிக் கறியாக்கு என்று சொன்னார்.

>>

அந்த மடையன், அவ்வாறே செய்வதாகச் சொல்லிட்டுச் சந்தைக்குச் சென்றான். அங்குப் பலரை ஓரிடத்திற்குக் கூப்பிட்டு ஒன்றாகச் சேர்த்து அவர்களைப் பார்த்து, "என் வீட்டு தலைவரை நீங்கள் யாவரும் அறிவீர்களன்றோ? அவர் சைவர் என்பதுதான் உங்களுக்கெல்லாந் தெரியுமே. அவர் ஒரு நோயின் பொருட்டு இன்று ஆட்டுக்கறி சாப்பிடப் போகிறார். இச்செய்தி மிக மறைமுகமாக இருக்கவேண்டும். ஆட்டுக்கறி தின்றால் அதன்மேல் செய்ய வேண்டியதென்ன? ஒரு காரியத்தைச் செய்தால் அதன் பிறகு ஏற்படக்கூடிய நிலைமையையுந் தெரிந்து காரியத்தைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய தலைவர் கட்டளை” என்று சொன்னான்.