உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

297

43. ஏழு கும்பகருணர்கள்

முன்காலத்திலே ரோம் நகரத்தில் செங்கோல் செலுத்திய அரசர்களில் ஒருவனுக்கு டீஸியஸ் என்று பெயர். அவனுடைய அரசாட்சியின் காலத்தில் கிறித்து மதாபி மானிகள் பலர் கொலையுண்டார்கள். அம் மதப் பற்றுடைய வர்களுக்குள்ளே மேன்மக்கள் வரிசையைச் சேர்ந்த ஏழு ளைஞர்கள் எபேசு நகரத்தில் இருந்தார்கள். மதத்தின் பொருட்டுத் தங்கள் குலத்தவர்களில் பலர் கொலைசெய்யப் படுகிறதைக் கண்டு அந்த ஏழு இளைஞர்களும் பக்கத்தில் இருந்த ஒரு காட்டிற்குப் போய் அங்கிருந்த மலைக்குகை ஒன்றிற் புகுந்து ஒளிந்துகொண்டார்கள். மேற்படி அரசன் அதை அறிந்தான். அவர்கள் வெளியே வரமுடியாதபடி அந்தக் குகைவாசலை அடைத்து விடச் செய்தான்.

மேற்படி ஏழு இளைஞர்களும் குகைக்குள்ளே படுத்து மெய்ம்மறந்தவர்களாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு நூற்றெண்பத்தேழு ஆண்டுகள் உறங்கியபிறகு இரண்டாவது தீயோவோஸியஸ் அரசன் செங்கோல் செலுத்திய நாளையிலே தற்செயலாய் இயல்பாகவே விழித்து எழுந்திருந்தார்கள்.

இவ்வாறு நெடுங்காலம் உறங்கியபடியால் அவர் களுக்குப் பொறுக்கமுடியாத பசி உண்டாகியது. குகை வாசலைத் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள். பிறகு தங்களில் ஒருவனை நகரத்திற்கு அனுப்பி உணவுப்பொருள்கள் வாங்கிக் கொண்டு வரச்சொன்னார்கள். அவன் நகரத்திற்குள் நுழைந்து தெருவழியே சென்றான். நகரம் எங்கும் இடத்துக்கிடம் சிலுவைகள் நட்டிருப்பதைக்கண்டு வியப்படைந்தான். பிறகு ஒரு ரொட்டிக்கடைக்குச் சென்றான். ரொட்டிக் கடைக்காரன் இந்த இளைஞன் அணிந்திருந்த பழைய காலத்து உடையையும் பழைய