உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(298

அப்பாத்துரையம் - 35

போக்கான மொழியில் அவன் பேசிய பேச்சையுங்கண்டு வியப்படைந்தான். அந்த இளைஞன் உற்றுப்பார்த்தான். இளைஞன் தான் வாங்கிய ரொட்டிக்குப் பழங்காலத்து நாணயம் ஒன்றைத் தன் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தான்.மேற்படி ரொட்டிக் கடைக்காரன் இளைஞனுடைய நடைஉடையையும் அவன் மொழிகளையும் பார்த்து அவனைப் பட்டிக்காட்டான் என்றும் எங்கேயோ புதையலெடுத்து இந்தப் பழைய நாணயங் களைக் கொண்டு வந்திருக்கிறான் என்றும் முடிவு செய்தான். அந்த இளைஞனை அழைத்துக்கொண்டு போய் நகரத் தலைவன் முன்பு நிறுத்தினான்.

நகரத் தலைவன் இளைஞனைப் பார்த்து, “இந்தப் பழைய உனக்கு எங்கே அகப்பட்டது? நீ புதையல்

நாணயம்

எடுத்தாயா?" என்று உசாவினான். ளைஞன் தன் வரலாற்றையும் தன் கூட்டாளிகளைப் பற்றியும் விளக்க மாகச் சொன்னான். நகரத் தலைவன் இதனைக் கேட்டுப் பெருவியப்படைந்தான். அவனை அரசனிடத்திற்கு அழைத்துக் கொண்டு போய் நிறுத்தினான். அரசன் இளைஞன் மூலமாக எல்லாச் செய்திகளையும் உணர்ந்தான். தன்னுடைய அமைச்சன் குரு முதலான எல்லோரையும் அழைத்துக் கொண்டு குகைக்குச் சென்றான். குகையில் மற்றைய இளைஞர்களையும் எல்லோரும் பார்த்தார்கள். நூற் றெண்பத்தேழு ஆண்டுகளாகியும் அவர்களுடைய இளமைக் குரிய உடற்கட்டுக் குன்றாதிருப்பதைப் பார்த்து எல்லோரும் வியப்படைந்தார்கள்.

அரசன் அந்த ஏழு இளைஞர்களையும் தன்னோடு நகரத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தான். ஊர் நடுவிலே யிருந்த பெரிய மைதானம் ஒன்றில் பொதுக்கூட்டம் ஒன்று கூடியது. நகர மக்கள் எல்லோரும் அங்கு வந்து கூடினார்கள். இளைஞர்கள் தங்களுடைய வரலாறுகளை முதலில் இருந்து முடிவுவரை விளக்கமாகச் சொன்னார்கள். பிறகு நகரமக்கள் அனைவருக்கும் வாழ்த்துரை கூறினார்கள். நின்ற இடத்தி லேயே விழுந்து இறந்து போனார்கள். ஆண்டு தோறும் சூன் திங்கள் இருபத்தேழாம் நாள் (அந்த இளைஞர்கள் இறந்த நாள்) அவர்களுடைய நினைவைக் கொண்டாடும் விழா நடந்து வருகிறது.