உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

299

44.வால் இருக்க வேண்டிய இடத்தில் தலை

பல ஆண்டுகளுக்கு முன்னர் மாளவ நாட்டில் வறியவன் ஒருவன் இருந்தான். பொருள் தேடி நலமடையலாம் என்று அவன் பலவாறு முயன்றான். அவனுக்கு எந்தக் காரியமுங் கைகூடி வரவில்லை. அந்த ஊரில் உள்ள மக்கள் யார் என்ன சொன்ன போதிலும் சிறிதும் ஆராய்ந்து பாராமல் கேள்விப் பட்டவைகளையெல்லாம் உண்மை என்று நம்பும் இயல்பினை யுடையவர்கள். இதனை நன்கு உணர்ந்தவறியவன் அம் மக்களை வஞ்சித்துப் பொருள் திரட்டவேண்டும் என்று எண்ணினான்.

ஒரு நாள் ஒருவருக்குந் தெரியாமல் தன்னுடைய ய குதிரையைக் குதிரை லாயத்தில் வால் பக்கம் இருக்க வேண்டிய இடத்தில் தலைப் பக்கம் இருக்கும்படி வழக்கத் திற்கு விரோதமாகத் திருப்பிக் கட்டி வைத்தான். பிறகு லாயத்தைப் பூட்டி விட்டு வெளியே வந்தான்.

66

“ஓ மக்களே! வால் இருக்க வேண்டிய இடத்திலே தலை யிருக்கும் குதிரையைப் பார்த்தீர்களா? என்னுடைய லாயத் தில் அத்தகைய புதுமையான குதிரை ஒன்று இருக்கிறது. வேடிக்கை! வேடிக்கை! ! கட்டாயம் பார்க்க வேண்டிய வேடிக்கை; பார்க்க வருபவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும்" என்று எங்கும் பறையறிவித்தான். துண்டுத் தாள்கள் அச்சிட்டு பரப்பினான்.

"சொன்னவர் சொன்னாலும் கேட்பவர்கட்கு மதி யில்லையா” என்னும் பழமொழியையும் எண்ணிப் பாராமல் அப்புதுமையைக் காணும் பொருட்டுப் குறிப்பிடப்பட்ட நாளில் மக்கள் அந்தக்கோமாளியினுடைய குதிரை லாயத்துக்கு