உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

15

கயற்கண்ணி அன்றிருந்த களிப்பு நிலையில் அதை மறுக்க எண்ணவில்லை. அவன் கழுத்திலிட்ட டாள்.

அதனை அணிந்துக்கொண்டு, வேனில் கண்ணாடியில் முகம் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். அதனுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தான். வாணகையும் அரசியும் எவ்வளவு கேட்டும் அதை அவன் திரும்பத் தர மறுத்து அடம் பிடித்தான். வாணகை அடித்த போதும் அவன் அழுதானே தவிர, பொன்மாலையை விடவில்லை.

"சரி, வாணகை! அவன் இன்று போட்டுக் கொள்ளட்டும்!” என்று அரசி கூறினாள்.“அவன் தூங்கட்டும், நான் அதை எடுத்து வைத்து, மறுநாள் கொண்டு வந்து விடுகிறேன்” என்று வாணகை அரசியிடம் சாடையாகக் கூறினாள். "கடம்பன் இறந்து நெடுநாளாயிற்று. இனி, இது, ஓரிரவு இல்லாதால் குடீமுழுகிப் போகாது" என்று அரசி கயற்கண்ணி தனக்குள் கூறி

கொண்டாள்.

உயிர்மாலை, இங்ஙனம் வேனில் மாளிகை அடைந்தது.

கடம்பனும் மாடலனும் இப்போது விரைந்து திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டனர். அரசனுக்கும் அரசி செந்தாமரைக்கும் அமைச்சர்களுக்கும் மாடலன் தனித்தனியே அனுப்பினான்.

66

கடிதம்

"இளவரசன் கடம்பன் இறக்கவில்லை. கடவுளருளால் யாரும் எதிர்பாராத வகையில் பிழைத்திருக்கிறான். அரசு மரபு தழைக்க இரு குழந்தைகளும் அவனுக்கு இருக்கிறார்கள். சில காரணங்களால் இதுவரை அவன் வெளிவராமல் மறைந்திருக்க நேர்ந்தது. நாளையே அவன் அரண்மனைக்குத் தந்தையையும், தாயையும் காண வருகிறான். நேரில் மற்ற செய்திகள் யாவும் அரசர் முன்னிலையிலேயே விளக்கப்படும்" என்று அவன் எல்லாருக்கும் முடங்கல் வரைந்தான்.

அரசி கயற்கண்ணிக்கு மட்டும் முடங்கல் செல்லவில்லை. எல்லா முடங்கல்களும் இரவுநெடுநேரம் கழித்தே அனுப்பப் பட்டன. ஆகவே, அவளுக்குத் தகவல் எதுவும் எட்டவுமில்லை.

இரவோடிரவாக, உலாச் செல்லுவதற்கான ஏற்பாடுகளில் மாடலன் விரைந்தான். அரசி செந்தாமரை விடியற்காலமே