உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

||-

அப்பாத்துரையம் - 35

வேனில் மாளிகைக்கு ஆர்வத்துடன் வந்தாள். விவரங்களைப் பின்னால் விளக்குவதாகக் கூறி, மாடலன், கடம்பனையும், மனைவி மக்களையும் அரசி செந்தாமரைக்கு அறிமுகம் செய்துவைத்தான். வேனிலைக் கண்டதே அவளுக்குப் பாதி உண்மை விளங்கி விட்டது.

மாடலன் முன்னால் ஒரு சிவிகையில் சென்றான். ஆனை மேல் அம்பாரி வைத்து, அரசி செந்தாமரையும், இளவரசன் கடம்பனும், அவன் மனைவி மக்களும் சென்றனர். செய்தி ன்னதென்றறியாமலே மக்கள் ஆரவாரம் செய்தனர்.

கடிதத்தை மன்னன் காலையிலேயே பார்க்க முடிந்தது. அவன் விரைந்து ஆடையுடுத்துக் கொண்டு புறப்பட்டான். அரண்மனை வாயிலிலேயே அவர்களைக் கண்டு தன் கொலுவிருக்கைக்கு அழைத்துச் சென்றான். அவன் உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால், வியப்பாலும், மலைப்பாலும் அவன் இரண்டக நிலைப்பட்டிருந்தான்.

அரசி கயற்கண்ணி, உயிர்மாலையின் செய்தியை ஒரு பொருளாக எண்ணியிருக்கவில்லை. பரபரப்பின் இயல்பையும் ஒரு சிறிதும் உணர வில்லை. அந்நிலையிலேயே அரண்மனையில் ஏற்பட்ட பரபரப்பைக் காண விரைந்து வந்தாள்.

மாடலன், வந்திருந்தவர்களுக்கு உயிர்மாலையின் செய்தியை ஒரு கதையாகக் கூறினான். கதையாகவே அனைவரும் கேட்டிருந்தனர். ஆனால், இறுதியில், “இதுதான் கடம்பன் கதை. அவன் உயிர்மாலை அரசி கயற்கண்ணிடமிருந்து இன்றுதான் கிடைத்தது. அவன் இதோ உயிருடன் உங்கள் முன் நிற்கிறான்" என்றான்.

மன்னன் ஓடி, மகனைக் கட்டிக்கொண்டான்.

அரசி செந்தாமரை, மற்றொருபுறம் வந்து நின்று அவனை ஆர்வத்துடன் அணைத்துக் கொண்டாள்.

அரசி கயற்கண்ணி இப்போது உண்மை உணர்ந்தாள். தனக்கு இடர் வந்ததென்று கண்டு, ஓட முனைந்தாள். ஆனால், அமைச்சர் கண்சாடை காட்டினார்; காவலர் அவளைத் தடுத்து நிறுத்தினர்.