உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

மாடலன் பின்னும் பேசினான்:

17

"அரசே, கடம்பன் உங்களைத் தனியாகக் காணவரவில்லை. அவன் அருகில், அவன் துணைவி வாணகை, தங்கள் வாழ்த்துரைக்குக் காத்திருக்கிறாள். அருகே உங்கள் குலக்கொழுந்துகள் வேனிலும், தென்றலும் உங்கள் அணைப்புக்குக் காத்திருக்கின்றார்கள்” என்றான்.

அரசனும் அரசி செந்தாமரையும் கரையற்ற இன்பக் கடலில் திளைத்தனர். அவர்கள் மகிழ்ச்சியிடையே அவர்கள் அரசி கயற்கண்ணியைக் கடுமையாகத் தண்டிக்கக்கூட விரும்பவில்லை. போதிய வாய்ப்பு வளங்களுடனே அவள் ஓர் எல்லைப்புற மாளிகையில் அடைக்கப்பட்டாள்.

நீலமீன் மீண்டும் உயி பெற முடியவில்லை.ஆனால்,நீலமீன் போல ஒருபெட்டி செய்யப்பட்டது. அதில் உயிர்மாலை பூட்டி வைக்கப்பட்டது. உயிர்மாலையும் பெட்டியும் குளத்தடியில் வைத்துப் பேணப்பட்டன. குளம் மறுபடியும் அரசியாரின் கடிகாவலுக்குரியதாயிற்று. நாட்டு மக்களின் பேராட்களாக ஏழு பெருமக்கள் மானியம் பெற்று அதைக் காத்தனர்.

கடம்பன் பாய்மா நாட்டின் ஆட்சியைப் பெற்றான். அவன் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ந்தனர். வாணகையின் தந்தை நாட்டையும் அவன் மீண்டும் கைப்பற்றினான். அதன் குடிமக்கள் தலைவனுக்கே தென்றலை மணஞ்செய்வித்து, அவளை இடவை அரசியாக்கினான்.

இருநாடுகளும் புது வாழ்வு பெற்றுத் தழைத்தன.