உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

||-.

அப்பாத்துரையம் - 35

அவர்கள் சொற்களை அரசன் செவியில் வாங்கிக் கோக்கிளியைக் கொண்டு வந்து

கொள்ளவில்லை.

தருபவர்களுக்குப் பத்தாயிரம் பொன் மீண்டும் தருவதாக அவன்

பறை சாற்றினான்.

விறகுவெட்டி

கோக்கிளியைக்

கொண்டுவந்து

கொடுத்தான்.இரண்டாவது தடவையாக, கோக்கிளியின் மூலம் ஓர் ஏழையின் குடியில் வறுமை அகன்றது.

66

அரசன் அதை ஆர்வத்துடன் வரவேற்று மகிழ்ந்தான். 'என்னை விட்டு ஏன் ஓடினாய் கோக்கு?" என்று அவன் அன்புடன் கேட்டான்.

அரசியரைக் காட்டிக் கொடுக்கக் கிளிவிரும்பவில்லை. அதே சமயம் அவன் அன்புள்ளத்தின் புண்ணையும் அது அகற்ற விரும்பிற்று.

“பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்”

என்ற வள்ளுவர் நீதியிலே அக்கிளி வளர்ந்திருந்தது.

ஆகவே, அது உண்மையைச் சமயத்துக்கேற்ற முறையில் பக்குவமாகக் கூறிற்று.

66

'அரசே, உங்கள் அரசியர் என்னிடம் கொஞ்சிப் பேசினார்கள். 'எங்களைவிட அழகுடைய பெண்களைப் பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். என்னால் மெய் பேசாமல் இருக்க முடியவில்லை. 'பார்த்திருக் கிறேன்' என்றேன். அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. நான் அஞ்சி ஓடி விட்டேன்.

"நான் ஒரு கிளிதான். எனக்கு வீரம் அவ்வளவு இல்லாமல் இருக்கலாம். அதற்காக வருந்தாதீர்கள். எனக்கு நன்றியில்லாமல் போகவில்லை. நீங்கள் எனக்காக முன்பே பதினாயிரம் கொடுத்திருந்தீர்கள். இப்போது இன்னும் பதினாயிரம் கொடுக்கும்படி செய்துவிட்டேன். இதை நான் மறந்துவிட மாட்டேன்.

66

“கூடிய விரைவில் தங்கள் கடனைப் பன்மடங்கு திருப்பித் தராது இருக்கமாட்டேன்” என்றது கிளி.