உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

அப்பாத்துரையம் - 35

“நீ என்ன சொல்கிறாய், கோக்கு?” என்று மன்னன் கேட்டான்.

"எங்கே யார்? என்று நீங்கள் நேற்றுக் கேட்டீர்களல்லவா? ன்று அந்தக் கேள்விகளுக்கும், அதன் மேல் நீங்கள் கேட்க இருந்த கேள்விகளுக்கும் விளக்கம் தருகிறேன்.

“கடல் கடந்து கடாரம் என்றொரு நாடு இருக்கிறது.அதன் உட்புறத்தில் தனியரசியாக ஓர் ஒப்பற்ற அழகி இருக்கிறாள். அவள் பெயர் “இலஞ்சி”. உலகத்தின் அரசிகள் எல்லாரையும் விட அவள் அழகுடையவள். ஆனால், அவள் அழகை யாரும் பார்த்ததில்லை. எவரும் செல்ல முடியாத நாட்டின் நடுவில் அவள் தனித்து வாழ்கிறாள். நான் கிளி ஆதலால், அவளைப் பார்க்க முடிந்தது.

66

அவளை நான் உங்களுக்குக் காட்டவும் முடியும். நீங்கள் விரும்பி னால் அவளை உங்களுக்கே உரியவளாக்கவும் முடியும்.”

கிளி பேசி நிறுத்திற்று. மன்னன் அதை ஆவலுடன் நோக்கினான். “நான் என்ன செய்ய வேண்டும், செய்கிறேன்! ஆனால், நீ கிளியாயிற்றே, உன்னால் என்ன செய்ய முடியும்?” என்றான்.

66

“அதை நீங்களே பார்க்க இருக்கிறீர்கள்.

"முதலில் பயணத்துக்கேற்ற ஒரு குதிரைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உங்கள் கொட்டிலில் ஒட்டி மெலிந்த ஒரு கிழடு தட்டிய குதிரை நிற்கிறது. அது உண்மையில் குதிரை உணவை வெறுத்த விலங்கேயாகும். ஆறு மாதம் அதற்கு பொற்கடலையும் தேம்பாகும் கொடுக்க வேண்டும். அதன் பின் அது நம் பயணத்துக் குரியதாகும்” என்றது.

அரசன் அவ்வாறே செய்தான். அதன்பின் அக்கிழக் குதிரை எட்டிலக்கணக் கூறுகளும் நிறைந்த கட்டிளங் குதிரையாயிற்று. கோக்கிளி பயணத்துக்கு மற்ற ஏற்பாடுகளையும் சொல்லிற்று.

66

"அரசே! பொற்கடலையில் இன்னும் ஒரு படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் புறப்படலாம். ஆனால், பயணத்தின்போது நீங்கள் கவனத்தில் வைக்க வேண்டிய இன்னொரு செய்தி உண்டு. அதையும் கூறிவிடுகிறேன்.