உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

66

25

'இது தெய்வீகக் குதிரை. போகும் பயணத்தில், கடலில் இறங்கும் சமயம், இதை ஒரு தடவை மட்டும் சாட்டையால் அடிக்கலாம். மறுதடவை அடித்தால் குதிரையின் தெய்வீக ஆற்றல் போய்விடும். அது பழையபடி கிழக் குதிரையாய் விடும். நம் பயணமும் கெடும். இவ் வகையில் நீங்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்” என்றது.

அரசன் அவ்வாறே புறப்பட்டான். கிளியும் அவனுடன் சென்றது. நில எல்லை கடந்ததும், மன்னன் சாட்டையால் ஒரு தடவை தட்டினான். குதிரை அம்புபோல் கடலுக்குள் பாய்ந்து சென்றது. ஒன்றிரண்டு நாழிகைக்குள் அது மீண்டும் மறுகரை சேர்ந்தது. "இதுவே கடார நாடு" என்று கிளி அதைச் சுட்டிக் காட்டிற்று.

அடர்ந்த காடுகளை அடுத்தபோது, குதிரையின் கால்கள் நிலத்தில் பாவவில்லை. சிறகில்லாமலே அது தாவிப் பறந்து சென்றது.பின்னும் சிறிது நேரத்தில் அது காட்டு நடுவிலுள்ள ஓர் அகல்வெளியில் போய் நின்றது.

அப்போது நள்ளிரவு. அவர்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு கூப்பிடு தொலைவில் ஓர் அரண்மனை இருந்தது. கிளி அரசனுக்கு அதைச் சுட்டிக்காட்டிற்று. "இதுதான் அரசி இலஞ்சியின் மாளிகை. இப்போது குதிரையை மறைவில் கட்டிவிட்டு நாம் மரத்திலேறி இருப்போம்" என்றது.

புதர் மறைவில் குதிரை கட்டப்பட்டது. அரசனும், கிளியும் மரக் கிளைகளில் மறைந்திருந்தனர்.

பொழுது விடியப் போகும் சமயம் கிளி மீண்டும் பேசிற்று. “அரசே, பொற்கடலையில் இரண்டு குத்துக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்: வாயிற்படியில் ஒரு குத்தைச் சிதற விடுங்கள். பின் பத்தடிக்கு ஒன்றாக, வாயிற் படியிலிருந்து மரத்தடிவரை கடலைகளைப் போட்டுக் கொண்டே வாருங்கள். மரத்தடிக்கு வந்தபின் மரத்திலேறி முன்போல் மறைந்திருங்கள்” என்றது.

பொற்கடலைகளை அவ்வாறே தூவியபின் அரசன் மீண்டும் மரத்தில் வந்திருந்தான்.

மாளிகையின் வாயிற்கதவு திறந்தது. பணிநங்கை வந்து முற்றம் பெருக்கத் தொடங்கினாள். அவள் அழகைக் கண்டே