உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

27

படுத்தும் நோக்கத்துடன் மீட்டும் தட்டிவிட்டான். அந்தோ! அந்த மாயக்குதிரை மீட்டும் கிழக் குதிரையாயிற்று. கடல் இருந்த இடத்தில் திடுமென ஒரு திட்டு எழுந்தது. அதன்மீது குதிரையும், அரசனும் இளவரசியும் துணையற்றவராய் விடப்பட்டனர்.

து

“என்ன செய்து விட்டீர்கள், அரசே? எல்லா முயற்சியையும் வீணாக்கிவிட்டீர்களே! இப்புதிய திட்டில் சிக்கி விட்டோமே, என்ன செய்வது?" என்று கிளி புலம்பிற்று.

மன்னன் தன் பிழை எண்ணி வருந்தினான்.

இலஞ்சி முதன்முதலாக இப்போதுதான் வாய் திறந்தாள். மன்னன் வீரத்தோற்றம் அவள் உள்ளத்தைக் கவர்ந்திருந்தது. அவன் துயரம் அவள் உள்ளத்தைக் கனிவித்தது."அரசே, நடந்து விட்டதை எண்ணி வருந்த வேண்டாம்; தெய்வம் எப்படியும் வழிவிடும். அதுவரை உங்களுக்கு என்ன நேர்வதாயிருந்தாலும், நான் உங்களுடன் துன்பத்தை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்வேன்; உங்களுக்கு என்னாலான எல்லா உதவியும் செய்வேன்; இந்தக் கணமுதல் நீங்களே என் வாழ்க்கைத் துணைவர்” என்றாள்.

அரசியின் அன்புச் சொற்களும், கிளியின் துணையும் அரசனை ஆற்றியிருந்தது. ஆனால், தீவினையின் சதி அவனை அத்துடன் விடவில்லை. மேலும் தீங்குகள் தொடர்ந்தன.

அவர்கள் தங்கிய திட்டு அந்தமான் தீவை அடுத்திருந்தது. அந்தமானின் ஒரு பகுதியை ‘அரங்காடி” என்ற அரசன் ஆண்டான். அவன் படகில் திமிங்கில வேட்டையாடி அத்திடலில் இறங்கினான். இலஞ்சியின் அழகு அவன் கண்களைப் பறித்தது. அவளை அவன் கைப்பற்ற முயன்றான். மன்னன் காயாம்பூ மன்னன் அரங்காடியை எதிர்த்து மல்லாடத் தொடங்கினான். ஆனால், அரங்காடியுடனிருந்த துணைவர், காயாம்பூ மன்னனைக் கட்டிப் போட்டுவிட்டு, இலஞ்சியை இழுத்துக் கொண்டு அரங்காடியுடன் சென்றனர். பின் தொடர முனைந்த கிளி மீதும் அவர்கள் கல்லெறிந்து சிறகொடித்தனர்.

இளவரசி இலஞ்சி கதறி அழுது பார்த்தாள்; கெஞ்சிப் பார்த்தாள்; அரங்காடியின் மனம் இளகவில்லை. பின் காலத்துக்கிசைய நடிப்பதே சரி என்று அமைந்தாள். ஆயினும் தான் இடமாற்றத்தால் நோயுற்றதாக அவள் பாவனை செய்தாள்.