உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

அப்பாத்துரையம் - 35

அது தீரஆறுமாதம் ஒதுங்கி நோன்பாற்றுதல் பயன்தரும் என்று கூறினாள். இனி, தன் அரசியாகவே அரசன் அவளை ஆக்க எண்ணியிருந்தான். ஆகவே, ஒரு தனிமாடம் கட்டித்தந்து அதில் நோன்பாற்றும்படி செய்தான். அவளுக்கு வேண்டிய யாவும் அரசி என்ற முறையில் தரும்படி சேடியருக்கும், ஏவலருக்கும் பணித்தான்.

அரசி இலஞ்சி பொரிகடலையும், பொற்கடலையும் கலந்து கிளிகளுக்கெல்லாம் அளிக்கப் பணித்தாள். கிளிகள் மொய்த்தன. பொரி கடலைகளைக் கொறித்து விட்டுப் பொற்கடலையை விட்டுச் சென்றன.

அரசி இலஞ்சியின் சூழ்ச்சி பேரளவில் பயன்பட்டது. னன்றால், கிளியின் அறிவுரை கேட்டு, அரசன் பின்னும் ஆறுமாதம் குதிரைக்குப் பொற்கடலை அருத்தினான். அதற்குமுன்பே கிளியின் இறக்கைகளும் குணப்பட்டன. கிளி அரசியைத் தேடி அலைந்தது.

அது சென்ற இடங்களிலெல்லாம், கிளிகள் அதனுடன் பேசின. பொற்கடலையுடன் கடலை நாள்தோறும் தூவப் பட்டதைப் பற்றிக் கூறின. கிளி உடனே இலஞ்சியின் தடம் அறிந்து அங்கே சென்றது. இளவரசி போதிய பொற்கடலைகளை ஒரு கிழியில் கொட்டி அதனுடன் அனுப்பினாள். குதிரை விரைந்து வலிமையுற்று வளர்ந்தது. ஆறுமாத அளவில், தெய்வக் குதிரையுடன் அரசன் காயாம்பூ அந்தமான் தீவில் இறங்கினான். கிளி முன்பே பறந்து சென்று அரசி இலஞ்சிக்குச் செய்தி கூறியிருந்தது. ஆறு மாதத்தின் கடைசி நாள் இரவு அது. அவள் தோழியரை அனுப்பிவிட்டு, நிலா முற்றத்தில் தன்னந் தனியே உலவிக் கொண்டிருந்தாள்.

ன்

மன்னன் அவளைத் தன் குதிரை மீது ஏற்றிக் கொண்டு, கடலடி சேர்ந்தான். ஒரே தடவை குதிரையைத் தட்டினான். அது அலைகள்மீது தாவிச்சென்றது.

மன்னன் கிளியோடு, இளவரசி இலஞ்சியை மணந்து இனிது வாழ்ந்தான். அவள் அழகைப் பற்றிக் கேள்வியுற்று, மற்ற அரசியரும் பார்க்க வந்தனர். கிளி கூறிய உண்மை கண்டபின், அவர்கள் கோபம் ஆறினர். அத்துடன் இலஞ்சி ஆறு