உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

அப்பாத்துரையம் - 35

"மாணிக்கம் எங்காவது நெல்லிக்காயளவு பெரியதா யிருக்குமா, மருது? உலகில் இல்லாததைக் கேட்டால், எங்கிருந்து பெற்றுத் தருவது?” என்று தந்தை அங்கலாய்த்துக் கொண்டார்.

மகளுக்குக் கோபம் வந்தது. “நீங்கள் பெரிய அரசரல்லவா? உங்களுக்கு ஒன்றும் அகப்படாதுதான். நான் உலகில் இல்லாததைக் கேட்கவில்லை. ஓர் ஏழை ளைஞனிடம் அத்தகைய மாணிக்கத்தைக் கண்டேன். அவன் அதைத் துச்சமாகக் கருதிக், கோலியாக வைத்துப் பிள்ளைகளுடன் ஆடுகிறான். உங்களுக்கு அஃது உலகில் அகப்படாத புதையலாக இருக்கிறது” என்றாள்.

அவள் தாய் வாழ்வரசிக்குக்கூட இப்போது உள்வெப்பம் பொத்துக் கொண்டு வந்தது. “உங்கள் அப்பாவுக்குத் தெரிந்த அளவு, அவனுக்கு மனைவி மக்கள் அருமை தெரியாது போலிருக்கிறது. ஒருவேளை அவன் மணமாகாத இளைஞனா யிருக்கலாம். அப்படியானால் அப்பா அதை வாங்கித் தரலாம்” என்றாள்.

இளநாகன் இந்த வசையால், கவண்கல்லெறிபட்ட இளநாகம்போல் குன்றினான். அவன் உடனே ஆட்களை அனுப்பி மணிவேலைக் கூட்டி வரச் செய்தான். அவனிடம் உள்ள மாணிக்கக் கோலியைக் கண்டான். அவனும் வியப்படைந்தான். "இந்த மாணிக்கத்தை என்மகள் விரும்புகிறாள்; இதை விலைக்குக் கொடுப்பாயா? என்ன விலைக்குக் கொடுப்பாய்?" என்று கேட்டான்.

66

"அப்படியா? உங்களுக்கு வேண்டுமானால் ஏதேனும் ஒரு விலை கொடுத்து எடுத்துக் கொள்ளுங்கள். நான்வேறு கோலி பார்த்துக்கொள்கிறேன்" என்றான்.

அவன் அசட்டையாக அதுபற்றிப் பேசியது கேட்டு மன்னன் வெட்கினான். அவனுக்கு ஆயிரம் பொன் கொடுக்கும்படி கட்டளையிட்டான்.

"அம்மா! நீங்கள் கடலிலே எடுக்க வேண்டாம் என்று சொன்ன மாணிக்கத்தை ஓர் அரசிளஞ்செல்வி விரும்பி யிருக்கிறாள், அதற்கான பணம் இதோ பாருங்கள்” என்று கூறி மணிவேல் தன் தாயிடம் ஆயிரம் பொன்னையும் கொடுத்தான்.