உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

அப்பாத்துரையம் - 35

விடை கோரினான். சேதாம்பல் ஆனமட்டும் அவனைத் தடுக்க முயன்றாள். பின் வழக்கம்போல அவனுடன் செல்ல விரும்பினாள். ஆனால், மணிவேல் இப்போது தனியாகவே போக விரும்பினான்.

அவனுக்குத் தன் பேராற்றலின் பெருமித உணர்வு இப்போதுதான் முதன்முதலாக ஏற்பட்டது. சிறுபிள்ளைத் தனமும், துடுக்குத்தனமும் மறைந்தன. வீரத் துணிச்சல் மட்டும் தொடர்ந்தது. அவன் துணிவும் தன்முனைப்பும் உடைய இளைஞன் ஆனான்.

“அம்மா! நான் என்ன சிறுபிள்ளையா? உங்களை நான் பாதுகாக்க வேண்டும். என்னை நீங்கள் பாதுகாக்க வேண்டிய தில்லை. மேலும் நான் வரத் தாமதமானால், மன்னனிடம் செய்தி கூற நீங்கள் இருந்தால்தானே நல்லது?" என்றான்.

அவன் கூறுவதிலும் உண்மை இருந்தது என்று அவள் நினைத்தாள். அவள் அன்பு குறையவில்லை. ஆனால், பொறுப்பு பெரிதாயிற்று. அவள், அவனுக்குக் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தாள்.

இத் தடவையும் படகு அம்புபோல் பாய்ந்து சென்றது. நடுக்கடலின் சுழியில் அவன் பம்பரமாகச் சுழன்றான். மாணிக்கங்களை அவன் மடி கொண்டமட்டும் எடுத்துக் கட்டினான். ஆனால், முன்போல படகு எதிர் திசையில் மீளவில்லை. சுழியின் நடுப்பள்ளம் வரை பம்பரம் போல் விரைந்து சுற்றிற்று.

சுழியின் அடியில் ஒரு புழைவழி இருந்தது. அதன் வழியாகப் படகு சரேலென நழுவி இறங்கிற்று. சிறிது நேரத்தில் புழை மீட்டும் திடுமென விரிவுற்றது. மேலுள்ள பள்ளத்தைப் போலக் கீழும் அது ஒரு பொள்ளலான விரிகுழாயாய் இருந்தது. அதன் அடியில் கடலுக்குள், ஒரு சிறு கடல் போல ஓர் ஏரி கிடந்தது.படகு விரிகுழாயின் அருகில் சுழன்று சுழன்று ஏரியில் இறங்கிற்று.

ஏரியின் நடுவே அவன் கண்ட காட்சி வேறு எவரையும் மலைப்படைய வைத்திருக்கும். ஆனால், அவன் வியப்புடன் நோக்கினான். பரமசிவனையே போன்ற ஒரு நீலநிற முக்கண்