உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

37

அரக்கன் நீரில் அமர்ந்து அறிதுயிலில் இருந்தான். அவன் சடைமுடிகள் பத்துத் திசையிலும் அலைஅலையாக எல்லையற்றுப் பரந்தன. அவையே கடலில் அலைகளாயின என்று அவன் நினைத்தான்.

சடைகளின்மீது ஒரு வெண்பனிப்பீடம் தொங்கிற்று. அதன் மீது நிலாவைப் பழிக்கும் வெண்பளிங்கு மேனியுடைய ஒரு பெண்ணுடல் கிடந்தது. அதன் நாடி நரம்புகள் நீலக்கொடிகளும், செங்கொடிகளும் மிடைந்தவை போல உள்மேனியில் தெரிந்தன.

னால், அவன் கண்ணைக் கவர்ந்த காட்சி உடலன்று; உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்தது.

வெட்டுவாய் அழகிய செந்நிறமாய், அச்சமும் கவர்ச்சியும் ஒருங்கே உடையதாய் இருந்தது. அதிலிருந்து வண்ணச் சிவப்பான குருதி மேல் நோக்கி வடிந்தது. உயரே செல்லச் செல்ல, அதுவே துளித்துளியாக விரைந்து சென்றது. சுழியில் மிதந்துவந்த மாணிக்கங்கள் அவையே என்று மணிவேல் கண்டான்.

மணிவேல் படகை அரக்கன் உருவுக்கு அருகே செலுத்தினான். அசைவற்ற ஏரியின் மரகத நீர்ப் பரப்பில் அது எளிதாக நழுவிச் சென்றது. வெண் பனிப்பீடத்தின் அருகிலிருந்து ஒரு சடைக்கூறு நீர் மட்டம் வரை தொங்கிற்று.

மணிவேல் படகை நீர்ப்பரப்பிலேயே விட்டு விட்டு, அதில் தொத்தி ஏறினான்.பனிப்பீடத்தில் நின்று மங்கையின் எழிலார் வடிவத்தையே நோக்கிக் கொண்டிருந்தான். துண்டுபட்டாலும் உயிர்த்துடிப்புடையதாகவே இருந்தது. மார்பகம் அலையற்ற கடல் எழுந்தெழுந்து அமிழ்வது போல, வீங்கி வீங்கி எழுந்தது. அவன் அதை கண் இமையாமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

அது

அம்மங்கையின் தலைமாட்டில் ஒரு வெள்ளிக் கழி கிடந்தது; கால் மாட்டில் ஒரு தங்கக் கழி கிடந்தது; வெள்ளிக் கழியால் அவன் அவள் உடலெங்கும் தட்டினான். ஒன்றும் நிகழவில்லை. பின்தங்கக் கழியால் அதே போலத் தட்டினான். அது காலில் பட்டதும், தலை உடலுடன் ஒட்டிற்று. மங்கை நெளிந்தாள்; மணிவேலை உருக்கமான பார்வையுடன் பரக்க நோக்கினாள்.