உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

அப்பாத்துரையம் - 35

மன்னன் கண்டீரன் இப்போது நோய்வாய்ப்பட்டான். அவன் உடல் ஏற்கெனவே முதுமையால் தளர்வுற்றிருந்தது.நோய் முதுமையின் நலிவைப் பெருக்கிற்று. இந்நிலையில் அவன் தன் ஆட்சிப் பொறுப்பைத் தன் புதல்வர்களுள் ஒருவரிடம் ஒப்படைக்க விரும்பினான். ஆயினும், எந்தப் புதல்வனைத் தேர்ந்தெடுப்பது என்று அவனால் எளிதில் முடிவு செய்யக் கூடவில்லை.

எல்லாரிடமும் அவன் சரிநிகர் அன்பு கொண்டிருந்தான். திறமையில் மிக்கவனைத் தேர்ந்து கண்டு, அவனிடம் குடிமக்கள் நலனை ஒப்படைக்க எண்ணினான்.

இந்நோக்கத்துடன் அவன் புதல்வர்களை அழைத்தான். “குழந்தைகளே, நான் உங்களுக்கு மூன்று தேர்வுகள் நடத்தப் போகிறேன். அவற்றில் வெற்றி பெறுகிறவனுக்கே நாட்டை அளிப்பேன்” என்று கூறினான்.

இதைக்கேட்ட புதல்வர் மூவரும் 'சரி' என ஒப்பினர்; தேர்வுகளைக் கூறும்படி வேண்டினர்.

மன்னன் கண்டீரன், “இன்னும் மூன்று மாதங்களுக்குள் நீங்கள் ஒவ்வொருவரும் நூறு முழம் நீள அகலமுள்ள மென்துகில் ஒன்று கொண்டுவரவேண்டும். அஃது, என் சிறு விரலின் கணையாழிக்குள் நுழையுமளவு நுண்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்; இதுதான் என் முதல் தேர்வு” என்றான்.

மூத்தவர்கள் இருவரும் எடுபிடி ஆட்களுடனும், வண்டி குதிரை களுடனும், மூட்டை முடிச்சுகளுடனும் புறப்பட்டனர். ஆனால், ளையவனான மருதன் தன்னந் தனியனாகவும், கால்நடையாகவுமே பயணத்தைத் தொடங்கினான்.

மூத்தவர் இருவரும் செல்லும் திசையிலெல்லாம் கண்ட கண்ட மென்துகில்கள் அனைத்தையும் வாங்கினர். அவற்றின் பளுவால் வண்டியின் அச்சுகள் வளைந்தன. குதிரைகளின் முதுகுகள் நெளிந்தன. ஆயினும், அவர்கள் மேன்மேலும் துகில்வகைகளை வாங்கிக் கொண்டே சென்றனர்.

இவர்களுக்கு நேர்மாறாக இளையவனான மருதன் எதுவும்

வாங்காமல் நடந்தான்.