உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

43

அவர்கள் செல்லும்வழி, ஓரிடத்தில் மூன்று சுவராகப் பிரிந்தது. ஒரு வழியில் மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் இருபுறமும் இருந்தன. தலைமூத்தவனான மல்லன் அதன் வழியே சென்றான்.

மற்றொரு வழி, தண்ணிழல் வாய்ந்த கனிமலர்க்காவி னூடாகச் சென்றது.இரண்டாவது இளைஞன் மாறன் அவ்வழிச் சென்றான்.

மூன்றாவது வழி கரடுமுரடாகவும் அங்கங்கே சேறு சறுக்கல் நிறைந்ததாகவும் காணப்பட்டது. சந்தடியில்லாத அந்த ஒதுக்குப்புற வழியையே மருதன் தெரிந்தெடுத்துக் கொண்டான்.

தந்தை கூறிய மென்துகில் தனக்குக் கிட்டக்கூடும் என்று மருதனுக்கு நம்பிக்கையில்லை. ஓரளவு அவன் மனமும் அதை நாடவில்லை என்னலாம். ஏனெனில், தேனிலந்தை திடீரென்று மறைந்தவுடன், அவன் தன் அண்ணன் மாரைப் போல அவளை முற்றிலும் மறந்துவிடவில்லை. 'அவள் எங்கே போயிருப்பாள்? என்ன ஆயிருப்பாள்?' என்று அவன் மனம் எப்போதும் சிந்தனையிட்டுக் கொண்டே இருந்தது.

தந்தையின் தேர்வை அவன் தன் கவலையைச் சிதறடிப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கொண்டான். ஒதுக்குப் புறமான வழியை அவன் தேர்ந்தெடுத்ததன் காரணம் அதுவே. தன் பயணத்தில் ஒன்று அவளைக் காண, அல்லது அவளைப் பற்றிக் கேள்விப்பட வழி ஏற்படலாம். அல்லது அவளைப் பற்றித் தனியேயிருந்து சிந்தித்து, மன வேதனைக்கு ஒரு போக்குக் காணலாம் என்று அவன் நினைத்தான்.

கரடுமுரடான வழியில் செல்லும்போது அவன் உள்ளத்தில் தேனிலந் தைக்காகத் தானும் தன் அண்ணன்மாரும் போரிட்ட காட்சி நினைவுக்கு வந்தது. தேனிலந்தையின் உருவம் மட்டுமன்றி, அதன் சூழலும் மனக் கண்முன் நிழலாடிற்று.

மருதன் கால்கள் அவனையறியாமல் எங்கெங்கோ அவனை இழுத்துச் சென்றன. ஆனால், ஒன்றிரண்டு நாட்கள் இவ்வாறு சென்றபின், அவன் கண்ட சூழல் அவனைத் திடுக்கிடச் செய்தது. தேனிலந்தைக்காகச் சண்டை நிகழ்ந்த இடத்தையே அவன் கண்முன் கண்டான்.