உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

49

""

போவதில்லை. ஏனெனில் தேனிலந்தையைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் நான் கண்ணால்கூடப் பார்க்க விரும்பவில்லை' என்று அவன் பிதற்றினான்.

தவளையின் கண்களில் ஒளி வீசின. அதன் உடலில் மின் ஆற்றல் பாய்ந்தது. அவன் காதல் உறுதி, மாந்தைச் சீமாட்டியின் மாயத்தை எதிர்த்தழிக்க அதற்குத் துணிவு தந்தது.

“நீ எந்த இளவரசியையும் தேட வேண்டியதில்லை. குறித்த நாள் வரும்வரை தேனிலந்தையையே எண்ணிக் கொண்டிரு. அந்தநாள் வந்ததும் தந்தையிடம் போ. ஆனால், போகும்போது நீ திரும்பிப் பார்க்கவும் கூடாது. பார்த்தால், உன் கண்முன் காண்பதைக் கண்டு சிரித்துவிடவும் கூடாது. மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிச் சென்றது.

மருதனுக்குத் தவளை கூறியது ஒன்றும் புரியவில்லை. ஆனால், "தேனிலந்தையை நினைத்துக் கொண்டிரு” என்பதை மட்டும் அவன் மறக்கவில்லை. அது இனிய கட்ட னிய கட்டளையாக இருந்தது. ஆயினும் அவன் நினைப்பின் ஆற்றல் மாந்தையின் மாயத்தைக்கட்டோடு மாய்த்தது என்பது அவனக்குத் தெரியாது.

குறித்த காலம் வந்ததும், மருதன் புறப்பட்டான். அவன் பின்னே சருகுகள் மீதும் சரல்கள் மீதும் எலிகள் ஓடுவது போன்ற அரவம் கேட்டது. அவன் தவளையின் கட்டளையை மீறித் திரும்பிப் பார்த்தான். வேறு யாரையும் சிரிக்க வைக்கத் தக்க காட்சியை அவன்கண்டான்.

குச்சிகளால்

தேர் போன்ற ஒரு சகடம் செய்யப்பட்டிருந்தது. அதன் மீதீருந்த ஒரு புல்கட்டின் மீது பச்சைத் தவளை வீறுடன் ஒய்யாரமாக வீற்றிருந்தது. தேரை இழுக்கும் குதிரைகள் நான்கு வெள்ளெலிகளா யிருந்தன.

ஒரு பெரிய தேரை வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தது. பச்சைத் தவளைக்கு இருபுறமும் இரண்டு கெண்டை மீன்கள் நின்றன. நீர்ப் பாசியாலான கவரிகளை அவை வாயில் கௌவி, பச்சைத் தவளைக்கு வீசின. பின்புறம் ஓர் ஆமை நின்று ஒரு பெரிய காளானால் குடை பிடித்தது.