உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

அப்பாத்துரையம் - 35

மருதனுக்கு உள்ளூரக் கிளர்ச்சியில்லை. ஆகையால் இக்காட்சி கண்டும் இவன் சிரிக்கவில்லை. சிறிது அருவருப்புடன் மீண்டும் நடந்தான். காட்சி சற்றே அவன் கண்முன் மறைந்தது. ஆனால், சிறிது தொலை செல்லுமுன், முன்கேட்ட அரவம் மீட்டும் அவன் காதுகளில் விழுந்தது. அவன் இப்போது திரும்பிப் பார்க்கவில்லை.

அவன் திரும்பிப் பார்த்ததனால், மாந்தையின் மாயம் சிறிது வலுப்பெற்றிருந்தது. ஆனால், அச்சமயம் மாந்தை தன் இறுதிப் படுக்கையிலிருந்தாள். அவள் சாகும் நேரத்தில் மீண்டும் மாயத்தால் தன் பழிகளைப் பெருக்க எண்ணவில்லை. தன் மாயக்கோலையே அவள் முறித்தெறிந்தாள்.

மருதன் சிரிக்காததனால், மீந்திருந்த சிறிது மாயமும் மறைந்தது.

னாள்.

தவளை - தன் அவல உரு நீங்கித் தேனிலந்தையான வெள்ளெலிகள் வெண்குதிரைகள் ஆயின.

கெண்டைமீன்கள் - அழகிய பாங்கிப் பெண்களாயின.

பாசிக்கவரி பசுமணிக் கவரியாயிற்று.

தேர் பொன்தேராயிற்று.

ஆனால், இத்தனையையும் மருதன் காணவில்லை. அவன் திரும்பிப் பாராமலே சென்றான்.

அவனுக்குமுன் அவன் அண்ணன்மார் இருவரும் ஒப்பற்ற அழகுடைய இரண்டு அரசிளஞ் செல்வியருடன் சென்றிருந்தனர். அரசன் மூன்றாம் புதல்வனுக்காகவே காத்திருந்தான்.

மருதனின் பின், பொற்றேரில் தேனிலந்தை வருவது கண்ட அனை வரும் வியப்புடன் ஆரவாரித்தனர்.

மருதன் திரும்பி நோக்கினான். அவனால், தண் கண்களை நம்ப முடியவில்லை. ஆனால், அப்படியே அவன் உள்ளம் இன்ப அலைகளில் மிகுந்தது.

உண்மையிலேயே தான் தேனிலந்தையை அடைந்து விட்டதாக அறிந்ததே, அவன் இன்பம் எல்லையற்றதாயிற்று.