உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

அப்பாத்துரையம் - 35

குதிரைகள் செந்நாகத்தின் கண்களில் தென்பட்டன. உறங்கிய குதிரைகள் உறங்கிய வண்ணமே இருந்தன. செந்நாகம் அவற்றை இரு நொடிகளில் விழுங்கி விட்டது. குதிரைகளின் எலும்புகள் நொறுங்கும் அரவம் மட்டும்தான் நண்பர்களுக்குச்

செவியிற்பட்டது.

செந்நாகம் மரத்தின் மேலிருக்கும் தம்மையும் கவனித்து விடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள். ஆகவே, அவர்கள் மூச்சுவிடக்கூடத் துணியவில்லை. செந்நாகமும் பசியின் முதல் அலை தீர்ந்ததுபோல, மெல்ல மெல்ல மரத்துக்கப்பால் நகர்ந்தது. இப்போதும் அது செம்மணி மீது ஒரு கண்ணாகவே சுற்றிச் சுற்றி வட்டமிட்டது. ஒவ்வொரு சுற்றிலும் வட்டம் பெரிதாயிற்று. பாம்பு நெடுந்தொலைவு சென்றது.

இரண்டு நாழிகை நேரம் ஆயிற்று. பாம்பு கண்ணுக் கட்டாது மறைந்துவிட்டது. ஆனால், செம்மணியின் ஒளி மட்டும் எங்கும் பட்டப் பகலாக்கியிருந்தது.

66

‘ஆகா, எத்தகைய ஒளிமணி மாணிக்கம். அதிலும் நாக மாணிக்கம்! அகலுலகச் செல்வத்தைவிட அரிய செல்வம் நம்முன் கிடக்கிறது!” என்று வான்மதி வாய்விட்டுக் கூறினான்.

அவன் வாய்க்குள்ளாகத் தனக்குத்தானேதான் இதை வெளி யிட்டான். ஆனால், அவன் வாய் மூடுமுன், மானவேல் தன் கட்டுகளை அவிழ்த்துவிட்டான். பரபரவென்று மரத்திலிருந்து இறங்கினான். பாம்பின் பார்வையில் படாதவாறு மரத்துடன் மரமாகக் கீழ்நோக்கி இழைந்தான். நிலத்துடன் நிலமாக மரத்தடியில் தவழ்ந்து சென்றான். இறந்த குதிரைகளின் இலத்தியைத் திரட்டிக் கொண்டு, இம்மெனுமுன் அவன் மேலே ஏறினான்.

வான்மதி இளவரசன் திடீர்ச் செயல்கண்டு திகைத்தான். ஆனால், அவனைத் தடுப்பது வீணாகும் என்பது அவன் அனுபவம். அவன் போக்கில் விட்டு அவனைக் காப்பதிலேயே அவன் முனைந்தான். இளவரசன் போக்கையே அவன் விழித்த கண் மூடாமல் பார்த்திருந்தான். அவன் செயலின் குறிப்பையும் அவன் அறிந்து கொண்டான்.