உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

53

எதுவும் இல்லை. ஆனால், குளத்தருகில் மட்டும் மிகப் பெரிய மரம் ஒன்று நின்றது. அதில் ஏறியிருந்து, இரவைக் கழிக்க அவர்கள் முனைந்தார்கள்.

குதிரைகளை அவர்கள் அடிமரத்திலே கட்டினார்கள். மரத்தின் பெருங் கிளைகளினிடையே வாய்ப்பான இடம்தேடி உட்கார்ந்தார்கள். உறக்கம் வராமலிருப்பதற்காக அவர்கள் ஒருவர் முதுகில் ஒருவர் புதிர் போடுவதும், அதை முதுகிலேயே விடுவிப்பதுமாய் இருந்தனர். அத்துடன் கண்ணயர்ந்தாலும் விழாதபடி ஒருவரை ஒருவர் மேல் துண்டுகளால் மரத்துடன் இறுக்கிக் கட்டினார்கள்.

நள்ளிரவில் இருவர் கைகளுமே சோர்வுற்றன. கண்ணிமைகள் தம்மையறியாமல் மெல்ல மூடின. அச்சமயம் கடலில் அலை எழுவதுபோன்ற ஒரு பேரரவம் உண்டாயிற்று. இருவரும் அதனால் விழித்துக் கொண்டார்கள். குளத்தின் நீர் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

இருட்டில் அதன் நுரைகளின் குமுறல் அச்சம் தருவதா யிருந்தது. மானவேலும் வான்மதியும் அத்திசையிலேயே கருத்துச் செலுத்தியிருந்தனர். இருட்டில் இருட் பிழம்புபோல ஒரு கரிய உருவம் நீர் நடுவில் குளப்பரப்பைத் துளைத்தது. அது குளக்கரையை நோக்கி நீண்டு கொண்டே கொண்டே இருந்தது. குளங்கடந்தும் அது வளர்ந்தது.

உருவில் பாதி, கரை மீது வந்தவுடனே திடுமென ஒரு செவ்வொளி தோன்றிற்று. நீரும், கரையும், அவற்றிலுள்ள பொருள்களும் பட்டப் பகலில் தெரிவதுபோலத் தெரிந்தன. அதேசமயம் உருவின் கோரவடிவமும் நன்றாகப் புலனாயிற்று. அது இரண்டு மூன்று முழம் குறுக்களவும் நூறு முழத்துக்குமேல் நீளமுமுள்ள ஒரு செந்நிறப் பாம்பாயிருந்தது. அதன் அலகில் இருந்த ஒரு செம்மணியே அத்தனை பேரொளிக்கும் காரணமாக லங்கிற்று. செந்நாகம் அதை மரத்தினருகே நிலத்திலிட்டது. அதைச் சுற்றி வட்டமிட்டது.

இளவரசனுக்கும்,

ள அமைச்சனுக்கும் மெய்ம்மயிர் எல்லாம் சிலிர்த்தன.என்ன நடக்குமோ என்று அவர்கள் உள்ளூர நடுங்கினர்.அவர்கள் அஞ்சியது தவறன்று. தூங்கிக் கொண்டிருந்த