உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

அப்பாத்துரையம் - 35

வான்மதியும் எண்ணினார்கள். அவர்கள் ஒதுங்கி நின்று, அவள் தெளிந்தபின் வரவிரும்பினார்கள். ஆனால், அவள் முகம் திடுமென மாறிற்று. அது அமைதியும், இனிமையும் உடையதாயிற்று.

66

“அன்பர்களே! நீங்கள் யார்? உங்களைக் கண்டு நான் அஞ்ச வில்லை. வழக்கமாக நான் காணும் உருவத்தைக் கண்டே அஞ்சினேன். இன்று அது, புது உருவத்தில் வந்தது என்று எண்ணினேன். நான் எண்ணியது தவறு என்றே தோன்றுகிறது. ஏனெனில், நீங்கள் இருவரா யிருக்கிறீர்கள். மேலும் நான் விரும்பினாலல்லாமல் பூதம் மனித உரு எடுக்க முடியாது என்று அதுகூறக்கேட்டிருக்கிறேன்” என்றாள் அவள்.

மானவேல் தன்னைப்பற்றியும் வான்மதியைப் பற்றியும் பேசினான். அதன்பின், “பூதத்தைப் பற்றி நீ அஞ்ச வேண்டாம், அம்மணி! அது நாங்கள் கண்ட செம்பாம்பாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். நான் அதைக் கொன்று புதைத்துவிட்டேன். அது இனி வந்து உன்னை அச்சுறுத்தாது என்றான்.

அவள் முகத்தில் மகிழ்ச்சி மின்னிட்டது. ஆனால், அதை அடுத்து அவநம்பிக்கையும் நிழலாடிற்று. மானவேல் அதைக் குறிப்பாக உணர்ந்தான். செம்மணியை எடுத்துக் காட்டினான்.

செம்மலர்த்தாள் முதல் மகிழ்ச்சியில் எழுந்து ஆடினாள்; பாடினாள்; பின் மெல்ல நண்பர்களிடம் தன் கதை முழுவதும் கூறினாள். செம்மணி மாணிக்கத்தின் முழு ஆற்றலையும் அவள் தெரிவித்தாள். "இந்தச் சிறையிலிருந்து வெளிப்பட்டுக் குளப்பரப்புக்குச் செல்ல, இந்தச் செம்மணி மாணிக்கம் ஒன்றுதான் உதவும். அதை நீங்கள் பெற்றுவிட்டீர்கள். அத்துடன் வெளியுலகத்துக்குச் சென்ற பின்னும் இதன் மதிப்புப் பெரிது. இது இரவில் பத்து நாழிகை தொலைவும், பகலில் ஐந்து நாழிகை தொலைவும் ஒளி வீசும். இதை வைத்திருப்பவர் அங்ஙனம் வைத்திருக்கும்வரை மீளா இளமையும் பெறுவர். இதைப் பெற்றதனால் தாங்கள் எனக்கு உயிரும் வாழ்வும் அளித்தீர்கள். உங்களுக்கு என் ஆவியும் உடலும் உரியன!" என்றாள்.