உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

59

"எழிலரசி, என் ஆவியும் உடலும் உன்னைக் கண்ட கணத்திலேயே உனக்கு உரியன ஆகி விட்டன. ஆயினும், என் உரிமையை நான் வலியுறுத்த வில்லை. உன் விருப்பமே என் ஆணை” என்றான்.

மிகச்சில நாட்களில் மானவேலும் செம்மலர்த்தாளும் உடலும் உயிருமாகப் பழகிவிட்டனர். வான்மதி, நண்பனின் ன்ப வாழ்வு கண்டு மகிழ்வடைந்தான். ஆயினும், அவன் இளவரசனைப் போல நாட்டை மறந்து இருக்க முடியவில்லை. தன் மற்றக் கடமைகளையும் அறவே மனத்தை விட்டு அகற்றிவிடவில்லை. "தாய் தந்தையர், நாட்டு மக்கள் நம்மைக் காணாமல் கவலைப்படுவார்கள். நாம் விரைவில் திரும்பிச் செல்ல வேண்டாமா?” என்று அடிக்கடி நினைவூட்டினான்.

மானவேல் நீர் நங்கையைத் தன்னுடன் இட்டுச் சென்று மணம் செய்துகொள்ள விரும்பினான். அவளும் இதற்கு மனமகிழ்வுடன் இசைவு அளித்தாள். ஆனால், இளவரசன் வந்தபடியே திரும்பிப் போக விரும்ப வில்லை. இளவரசியின் மதிப்புக்கேற்ப அரசின் ஆரவாரத்துடன் அவளை இட்டுச் செல்ல விரும்பினான்.

'நண்பனே, நீ முதலில் சென்று, எல்லாருக்கும் என் நிலையை விளக்கிக் கூறு. இளவரசி பற்றியும் கூறி அவளுக்கேற்ற சிவிகை. காவற் படை முதலியவற்றுடன் திரும்பி வா. குளங் கடந்து செல்லும் செம்மணி மாணிக்கத்தைக்கூட நீயே கொண்டு போகலாம்; நீ திரும்பி வரும்வரை நான் இளவரசியுடன் இருப்பேன்” என்றான்.

வான்மதி

இணங்கினான்.

ஆனால்

செம்மணி மாணிக்கத்தை அவன் கொண்டுசெல்ல விரும்பவில்லை. “அண்ணலே, மணி உங்களிடமே இருக்கட்டும். தேவைப்படும் சமயம் வெளியே வரப்போக அது உங்களுக்குப் பயன்படும். நீங்கள் என்னை வெளியே வந்து அனுப்பி வைத்தால், போதுமானது.நான் திரும்பி வந்ததும் குள நடுவே தங்கள் பெயர் செதுக்கிய ஒரு கல்லை இடுவேன். அதைத் தாங்கள் அடையாளங்கண்டு வெளியே வரும்வரை காத்திருப்பேன். அதன்பின் மூவரும் முறைப்படி நாடு செல்லலாம்” என்றான்.