உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

அப்பாத்துரையம் - 35

வான்மதியின் ஏற்பாடு மானவேலுக்குப் பிடித்திருந்தது. அன்றே வான்மதி புறப்பட்டுச் சென்றான்.

ஆனால், வான்மதி திரும்பி வரப் பல நாட்கள் சென்றன. மானவேலுக்கும் செம்மலர்த்தாளுக்கும் நாட்கள் கணங்களாகவே கழிந்தன. அந்நாட்களில் செம்மணி மாணிக்கத்தை மானவேல் ஒரு தடவைகூடப் பயன்படுத்த எண்ணவில்லை. செம்மலர்த்தாள் உறங்கும்போது, அவன் அவளைப் பார்த்துக் கொண்டே யிருப்பான். அவள் விழித்த பின் அவளுடன் பேசிக்கொண்டே பொழுது போய்விடும். ஆனால், மானவேல் உறங்க நேர்ந்த சமயம் செம்மலர்த்தாளால் அப்படி நேரம் போக்க முடியவில்லை. வீணாகக் கழியும் அந்த நேரத்தில் ஏன் மேலுலுகம் சென்று சிறிது பார்த்துவரக்கூடாது என்று அவள் எண்ணினாள். ஆண்டுகள் குளத்தின் சிறையில் அடைபட்டிருந்ததால், அவள் ஆர்வம் பெரிதாயிருந்தது. ஆகவே, அவள் செம்மணி மாணிக்கத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

பல

மாலைவெயில் பொன்னிலவுபோல் எறித்தது. அவள் குளத்தின் படிக்கட்டிலமர்ந்து உடல் மினுக்கினாள். பின் விரைந்து வந்து இளவரசன் படுக்கையண்டை அமர்ந்தாள்.

ஒரு தடவை வெளியுலகைக் கண்டபின், அவள் ஆர்வம் இன்னும் பெரிதாயிற்று. நாள் தோறும் இவ்வாறு இளவரசன் உறங்கும்வேளையில் மாலையில் அவள் மேலே வந்து குளப் படியில் ஓய்வாக இருந்து இன்புற்றாள்.

ஒருநாள் மாலையில் அவள் குளப் படியில் இருந்து, செங்கதிர் வானைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அச்சமயம் அவளருகே பின்புறம் ஒரு கிழவி அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். இதைச் செம்மலர்த்தாள் கவனிக்கவில்லை. அவள் முன்னே மற்றோர் இளைஞன் வந்து கொண்டிருந்தான். அவனையும் அவள் நெடுநேரம் பார்க்கவில்லை.

இருந்த

முன்புறமாக வந்த இளைஞன் அருகே மலைக்கோட்டை நாட்டின் இளவரசன். அவன் பெயர் எழுமுடி. அவன் செம்மலர்த்தாளைக் கண்டவுடன் பேச முடியாது வாயடைத்துப் போனான். அவள் அழகும் புதுச் சூழலும் அவனை மலைக்க வைத்தன. ஆனால், அந்த அழகு அவனை