உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

65

வேண்டும்' என்று அவன் எண்ணத் தொடங்கினான். அவன் கவலை பெருகிற்று.

அவன்

மூளை

வேலை செய்யத் தொடங்கிற்று. சிவிகையையும் காவலர்களையும் அவன் வைகா நாட்டுக்கே அனுப்பிவிட்டு, இளவரசன் நிலை பற்றிய தடங்காண எங்கும் அலைந்தான்.

எழுமுடி, செம்பாலை ஆகியவர்கள் திருமணம் ஒத்தி வைக்கப் பட்டாலும், அதுபற்றிய ஏற்பாடுகள் மும்முரமாகவே இருந்தன. நீரிலிருந்து எழுந்த நங்கை பற்றிய ஆர்வ வரலாறு, அவளைக்கைப்பற்றிய கிழவியின் திறம்,செம்பாலைக்கு இதனால் வந்து வாய்த்த

மணமகனின்

பித்துக்கொள்ளித்தனம்

ஆகியவையே எங்கும் பேச்சாயிருந்தது. இவை வான்மதியின் செவிக்கும் எட்டின. இவற்றால் செம்மலர்த்தாளின் செய்தியை அவனால் ஊகிக்க முடிந்தது. கூடிய விரைவில் அவளையும் தன் நண்பன் மானவேலையும் மீட்க அவன் ஆழ்ந்த திட்டமிட்டான்.

ஆறுமாதத் தவணை கடந்து வந்தது. மாயாண்டி இன்னும் திரும்பி வரவில்லை. அவனைத் தேடிக்காணப் பெய்வளை எங்கும் ஒற்றரை அனுப்பியிருந்தாள். வான்மதி மாற்றுருவில் ஒற்றருடன் ஒற்றனாகச் சென்று, அவனைப் பற்றிய தகவல்களெல்லாம் சேகரித்துக் கொண்டான். பின் மீட்டும் மாயாண்டியைப் போல ஆடையணிந்து அவனைப் போல நடித்தான். மற்ற ஒற்றர்கள் அவனைப் பெய்வளையிடம் சேர்த்தார்கள். அவள்கூட அவனை அடையாளம் அறியாதபடி, அவன் திறம்பட நடந்துகொண்டான்.

வழக்கம்போல, அவள் “உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேனடா. எங்கும் போய் விடாதே" என்றாள்.

"நீ இப்படி எப்போதுமே ஏய்க்கிறாய் அம்மா. திருமணம் உண்மையானால், எனக்குப் பெண்ணைக் காட்டு" என்றான்

அவன்.

தாய், அவனை அரண்மனைக்கு இட்டுச் சென்றாள். ஆனால், செம்பாலையிடம் அவனைக் கொண்டுசெல்ல அவள் தயங்கினாள். அவன் பேச்சம் நடப்பும் கண்டு, திருமணத்துக்கு முன்பே அவள் அவனை வெறுத்துவிடக்கூடும் என்று அவள் அஞ்சினாள். ஆகவே, செம்பாலையுடன் செம்மலர்த்தாளும்