உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

அப்பாத்துரையம் - 35

மன்னன் இணங்கினான். விரைவில் ஒரு நாளும் குறித்தான். கிழவி, அதே நாளில் தன் புதல்வனுக்கும் இளவரசியை மணம் செய்விக்கும்படி கோரினாள். இரண்டு திருமணங்களுக்கும் ஒரே நாள் குறிக்கப்பட்டது. ஆனால், நீர்நங்கை இதற்கு ஒரு தடை உண்டுபண்ணினாள். “எனக்கு முன்பே திருமணம் குறிக்கப் பட்டிருக்கிறது. மணமகனை மணவறையில் விட்டுவிட்டு நான் வந்திருக்கிறேன். ஆகவே, நான் ஆறுமாதம் எந்த ஆடவரையும் பார்ப்பதற்கில்லை. அக்கால முழுவதும் நான் நோன்பாற்ற வேண்டும்” என்றாள்.மன்னன் இதற்கு இணங்கினான். இரண்டு திருமணங்களும் ஆறுமாதம் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த ஏற்பாட்டுக்குக் கிழவி பெய்வளையும் மகிழ்வுடன் ணங்கினாள்.ஏனென்றால், அவள் குளக்கரையில் தங்கிய காலத்தில், அவள் புதல்வன் மாயாண்டி எங்கோ போயிருந்தான். அவன் வரவை எதிர்பார்த்தே திருமண நாள் குறிக்க அவள் எண்ணினாள்.

குளத்தடியிலுள்ள

அரண்மனையில் இளவரசன் மானவேல் தூங்கி யெழுந்தான். எழுந்தபோது, வழக்கப்படி செம்மலர்த்தாள் அருகிலில்லை. பூங்கா சென்றிருக்கக் கூடும் என்ற எண்ணத்துடன் அவன் பூங்கா சென்றான். எங்கும் தேடியும் காணாததால் பரபரப்படைந்தான். செம்மணி மாணிக்கத்தையும் காணாததால், அவன் நிலை இன்னும் மோசமாயிற்று. அவன் குளத்தடியில் அடைபட்டான். 'செம்மலர்த்தாள் எங்கே சென்றாள்? என்ன ஆனாள்?' என்று தெரியாமல் அவன் துடி துடித்தான்.

இந்நிலையில் அவன் ஒருநாள் பூங்காவில் தன் பெயர் எழுதிய கல் விழுவது கண்டான். மேலெழவிரைந்தான். செம்மணி மாணிக்கமில்லாமல் தான், செயலற்றிருப்பதுணர்ந்து மீண்டும் பதைத்தான். கற்கள் அடுத்தடுத்து விழுந்தன. அவை அவன் துயரைப் பெருக்கினவேயன்றி, வேறு எவ்வகை மாறுபாடும் உண்டு பண்ணவில்லை.

அவனைத் தேடி வான்மதி மேலே சிவிகை, குதிரைகள், காவலர்களுடன் வந்திருந்தான். குளத்தருகே அவன் கூடாரமிட்டுத் தங்கியிருந்தான். கற்கள் பல எறிந்து, பல மணி, பல நாள் காத்திருந்தான். இளவரசனுக்கு ஏதோ நேர்ந்திருக்க