உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

67

ஒருநாள் இரவு அவள்முன் வான்மதி வந்து நின்றான். அவளும் மாயாண்டியின் பித்துக்கொள்ளித்தனம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். தன்னை சிக்கவைத்த சண்டாளியின் பிள்ளை என்ற நிலையில், அவள் அவனை வேம்பாக வெறுத்தாள். ஆகவே, வான்மதியை எட்டிப் பார்க்க வில்லை. வான்மதி மெல்ல அவளுக்குத் தன்னை அறிமுகப்படுத்தினான்.

66

‘அழகரசியே, மானவேலிடம்தான் கோபம் கொண்டு வந்துவிட்டாய். வான்மதி உனக் கு என்ன செய்தான்? அவனிடமும் ஏன் கோபம்?” என்றான்.

அவள் திடுக்கிட்டு அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். அவனே மானவேலின் நண்பன் வான்மதி என்று கண்டதும், அவளுக்குப் போன உயிர் மீண்டது போலிருந்தது. ஆனால், வான்மதி உதட்டில் விரல் வைத்து அவளுக்கு எச்சரிக்கை செய்தான். “போக வழி செய்திருக்கிறேன். நள்ளிரவுக்குள் ஆயத்தமாயிரு” என்று கூறிச் சென்றான்.

அவளுக்கு அதற்குமேல் எச்சரிக்கை தேவையில்லை. தனக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக் கட்டிக்கொண்டாள்.எளிய ஆடையணி மணிகளை எடுத்துக் கொண்டாள்.

நள்ளிரவில் எல்லாரும் உறங்கியிருந்தார்கள். அரையுறக்கத் திலிருந்தவர்களும் வான்மதியையே பித்துக் கொள்ளி மாயாண்டி என்று கருதி விட்டுவிட்டனர். செம்மலர்த்தாளையும் யாரும் தடுக்கவில்லை. யாரோ அரண்மனைப் பணிப்பெண்ணை அவன் இட்டுச் செல்வதாகவே கண்டவர் எண்ணினார்கள். இருவரும் விரைந்து நகர் கடந்தனர்; காடடைந்தனர். இளவரசியிடமே செம்மணி மாணிக்கம் இருந்ததால், அவர்கள் குளத்தில் இறங்கி, மானவேலைச் சென்றடைந்தார்கள்.

தன் இன்னுயிர் நங்கையுடன் ஆருயிர்த் தோழனையும் கண்ட மானவேலின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவன் இருவரையும் ஆரத் தழுவி, இன்பக் கண்ணீர் ஆட்டினான்.

இத்தடவை அவர்கள் சிவிகை முதலிய ஆடம்பரங்களுக்கு முயற்சி செய்யவில்லை. எளிய உடையுடனேயே வைகா நாடு சென்றனர். கவலையிலாழ்ந்திருந்த வைகா நாட்டு மக்களும்