உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

||-

அப்பாத்துரையம் - 35

மன்னனும் களிப்பில் மூழ்கினர். இளவரசன் மானவேல் நீர் நங்கை செம்மலர்த்தாளை மணந்து இனிது வாழ்ந்தான்.

மலைக்கோட்டை நாட்டுக்கு மானவேல், ஆள் அனுப்பி இளவரசன் எழுமுடியை வரவழைத்தான். நடந்ததெல்லாம் கேட்ட எழுமுடி, செம்மலர்த்தாளை தன் தங்கையாகக் கொள்ள இசைந்தான். அத்துடன் அவளை உரிய இடம் சேர்த்த வான்மதிக்கே தன் தங்கை செம்பாலையையும் மணம் புரிவித்தான்.

பித்துக்கொள்ளி மாயாண்டிக்குச் செம்மலர்த்தாள் செம்மணியின் கதை கூறி, அதைப் பரிசளித்தான். அவன் அதைக் கொண்டு காட்டுக் குளத்தில் இறங்கி ஏறி விளையாடிக் களித்தான். அவன் புதிய அனுபவம் அவன் பைத்தியத்தையும் தெளிய வைத்தது.

செம்பாலையின் சேடி பைம்பொழிலையே அவன் மனமுவந்து மணந்து கொண்டான். பித்தந் தெளிந்ததே ஒரு பேரரசாட்சியாயிற்று என்று பெய்வளையும் மன மகிழ்ந்தாள்.