உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

73

செம்மொழி, கடவுளுக்கு மீண்டும் நன்றி செலுத்திப் பாடினான். புதிய வெள்ளிக்கலத்தை ஆடையால் பொதிந்த வண்ணம் அவன் வீட்டுக்கு வந்தான்.

வெள்ளிக்கலத்தைக் கண்டு சேயிழை சிறிது ஆறுதலடைந் தாள். ஆனால், அதைக் கவிழ்த்தபோது, உண்மையிலேயே இனிய பொங்கலமுதம் வழிவது கண்டு அவள் எல்லையிலா மகிழ்வு கொண்டாள். கணவன் முந்தய கலவகையில் கூறிய யாவும் உண்மையே என்பதில் அவளுக்கு இப்போது நம்பிக்கை வந்தது. விடுதிக்காரன் அவனை ஏமாற்றியிராவிட்டால் அன்றே தன் வறுமை தீர்ந்திருக்கும் என்றும் கண்டாள்.

செம்மொழி குடும்ப வாழ்வு முற்றிலும் மாறுபட்டது. குடும்பத்துக்கு வேண்டிய மட்டும் உணவு கிடைத்தது. அத்துடன் சேயிழை தன் கணவன் பெயரால் ஒரு விடுதியே தோற்றுவித்தாள்.

அதில்,கடவுட்கலத்தின் இனிய பொங்கலமுதே உணவாகப் படைக்கப்பட்டது. எந்த விடுதியிலும் கிட்டாத அந்த ன்னுணவை நாடி உள்ளூராரும்,வெளியூராரும் அதில் வந்து மொய்த்தனர்.

முதலில் செம்மொழியை ஏமாற்றிய விடுதிக்காரன் செவிக்குப் புதிய கலத்தின் புகழ் சென்றெட்டிற்று. அவன் புதுச் செல்வத்தில் அவனுக்கிருந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் அகன்றது. அது வரையாது கொடுத்தாலும் மண்கலம்தான்; கட்டமுதுதான் கொடுத்தது. ஆனால், செம்மொழியின் கலமோ வெள்ளிக்கலம்; அது பொங்கல முதமாகப் பொங்கிற்று.

இவை, விடுதிக்காரன் பொறாமைத் தீயை எழுப்பின. செம்மொழியின் விடுதிக்குப் புகழ் வளர வளர, விடுதிக்காரன் தொழில் தேய்ந்து வந்தது. இது, அவன் பொறாமையைப் பகைமை ஆக்கிற்று. அவன் அரசனிடம் சென்று “செம்மொழி மாயத்தால் பொருள் ஈட்டுகிறான்" என்றான்.

செம்மொழி, நல்ல பாடகன் என்பது பாணர்களுக்குத் தெரியும். அவன் அரசனையும் செல்வரையும் பாடாதிருந்தது பற்றி அவர்கள் முதலில் சட்டை பண்ணவில்லை. அவர்களே முதன்மை பெற அது உதவிற்று. ஆனால், இப்போது அவர்களும்