உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

அப்பாத்துரையம் - 35

அவன், ‘பாடாது பெற்ற செல்வங்' கண்டு புழுங்கினார்கள். அவர்களும் விடுதிக்காரன் கோள் சொல்லுக்கு ஒத்தூதினார்கள்.

மன்னன் செருக்குடையவன். தன் புகழ் பாடுவோர்களுக்கு அவன் பொருள் வழங்கிக் கொடைவள்ளல் என்று புகழ் பெற்றிருந்தான். தன்னைப் பாடாமல் காட்டில் யாரையோ பாடி ஒருவன் பெரும்பொருள் பெற்றது அவனுக்குப் பிடிக்கவில்லை.

மேலும் அம் மாயப் பரிசு, அவன் பரிசுகளை ஏளனம் செய்வதாக அவனுக்குத் தோன்றிற்று. ஆகவே, அவன் முன்பின் ஆராய்ந்து பாராமல், செம்மொழியை மாயக்காரன் என்று குற்றஞ்சாட்டினான். அவன் செல்வத்தையும், அவன் அமுதக் கலத்தையும் பறித்துக் கொண்டு அவனைத் துரத்தினான்.

செம்மொழி மூன்றாம் முறையாகக் காட்டில் அலைந்தான். இத்தடவை அவன் முகம் உண்மையிலேயே துயரமடைந் திருந்தது. ஏனென்றால், இப்போது அவனை வறுமை வாட்டவில்லை. அதனினும் கொடியவன் கண்மை அவன் உள்ளத்தைச் சுட்டறுத்தது. அவன் பாட்டு முன்போலவே இனிமையாயிருந்தது. ஆனால், அந்த இனிமையில் துன்பம் கலந்திருந்தது. அவன் அம்மையப்பனிடம் முறையீடு செய்தான்.

66

“அம்மையும் அப்பனும் நீ இருக்க

அடக்கு முறைகள்யார் செய்வதுமே! அன்பு வடிவமாய் நீ இருக்க, ஆரிவர் வம்புகள் செய்வதுவே!”

என்று கட்டையும் நெகிழப் பாடினான். இத்தடவை பொறுக்கிய காய்கனிகளை அவன் அம்மையப்பனுக்குப் படைத்தான். ஆனால், தான் உண்ணாமல், பசியுடனே படுத்தான்.

அவன் கண்கள் இறுகின. ஆனால், அவன் மனக்கண்கள் எப்படியோ திறந்திருந்தன. அவற்றின்முன் அம்மையப்பன் உருவமே உயிர்பெற்று எழுந்ததுபோல் இருந்தது. ஆங்காரத் துடன் அது அவன்முன் நின்று ஆடிற்று.

அம்மையப்பன் கையில் ஒரு பொன்கலம் ஒளி வீசிற்று. அதை அவர் கவிழ்த்துக் காட்டினார். அம்மையப்பனையே ஒத்த ஆங்கார உருவங்கள் நாற்புறமும் ஒன்றை ஒன்று தாக்கின. அடுத்த