உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

75

கணம் கடவுளுருவம் பொன்கலத்தைக் கவிழ்த்துக் காட்டிற்று. அத்தனை ஆங்கார உருவங்களும் கலத்தில் அடங்கின.

கடவுள் திருஉருவம் கலத்தை அவன் கையில் தந்தது. அது சிலையுருவத்திலேயே மறைந்தது. செம்மொழி எழுந்தான். கண்ணைக் கசக்கிப் பார்த்தான். அவன் அருகே கனவில் கண்ட பொற்கலம் இருந்தது.

தனக்காக இறைவன் கொண்ட கோபத்திருக்கோலத்தை எண்ணி அவன் உடல் பூரித்தது. மனமார அவர் ஆற்றலைப் பாடிப் பரவி விட்டு, நாட்டுக்கு மீண்டான்.

இத்தடவை தானாக அவன் பழைய விடுதிக்காரனிடம் சென்றான். அவன் கையிலிருந்து பொற்கலங்கண்டு விடுதிக்காரன் மலைத்தான். அதை அவனிடம் பெற எண்ணி முன் கொண்ட பகையையெல்லாம், மறந்தவனாக நடித்தான். அவனுக்கு உணவு பரிமாறி அன்புடன் நடத்தினான். ஆனால், செம்மொழி எக்காரணம் கொண்டும் கலத்தைக் கண்மறைய விடவில்லை.

66

இதை அரசனுக்கென்றே வாங்கி வந்தேன். உன் முன்னிலையிலேயே அதை அரசனிடம் காணிக்கையாகச் செலுத்தப் போகிறேன்.ஆனால், காணிக்கை செலுத்து முன், நான் இதனுதவியால், அரசனுக்கு விருந்து அளிக்க விரும்புகிறேன். நீயும் நண்பனாதலால், விருந்திற் பங்கு கொள்ள அழைத்துப் போக வந்தேன்” என்றான்.

விடுதிக்காரன் மகிழ்ச்சியுடன் அவனை அரசனிடம் இட்டுச்

சென்றான்.

எல்லாரும் விருந்துக்கு அமர்ந்தனர். மன்னன் அருகே முதலிடத்திலேயே விடுதிக்காரன் அமர்ந்தான். மன்னன் மதியவைக்கு வரும் பாணரும் சூழ்ந்திருந்தனர். செம்மொழி பொற்கலத்தை எடுத்து அவர்கள் நடுவே கவிழ்த்தான். ஆங்கார உருவங்கள் ஆயிரம் வெளிவந்தன. அவை ஆரவாரம் செய்யவில்லை. ஆனால், ஓசைப்படாமலே ஒன்றை ஒன்று தாக்கத் தொடங்கின.

இடையே இருந்த மன்னனும் விடுதிக்காரனும் பாணரும் அவ்வுருவங்களின் கைக்கு ஆயுதங்களாயினர். உருவத்துக்கு உருவம் அவர்கள் மொத்துண்டனர். உருவங்களின் நீள்கரங்கள்