உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

||-

அப்பாத்துரையம் - 35

பற்றியதால், அவர்கள் கழுத்துகள் குருதி கொப்புளிக்கத் தொடங்கின.

மன்னன்

மொத்துண்டவாறே பாணர் மன்னனை வேண்டினர். மற்றவர்களைவிட மிகுதியான இக்கட்டில் சிக்கியிருந்தான். அவன் செம்மொழியைக் கெஞ்சாதவண்ணம் கெஞ்சினான். னான். ஆனால், விடுதிக்காரனுக்குக் கெஞ்சக் வழியில்லை. அவன் “கூகூ” என்று அலறினான். அரை நாழிகை நேரம் இவ்வாறு சென்றது. பின்னும் செம்மொழி கலத்தை நிமிர்த்தவில்லை. ஆனால், அதைப் பிடித்துக் கொண்டே, உருவங்களை நோக்கிக் கையமர்த்திக் காட்டினான். அவை சற்றே அமைந்து நின்றன.

"மன்னனே, பொறாமை கொண்ட பாணர் சொல் கேட்டாய். வஞ்சக விடுதிக்காரனுக்கு உடந்தையாயிருந்து அநீதி செய்தாய். அதற்குத் தண்டனையாக நீ அரசாட்சியை மக்களுக்கே விட்டுச் செல்வதானால், இந்த ஆங்கார நடனத்தை நிறுத்துவேன். இல்லையானால், இது உங்கள் அனைவர் உயிரும் போகும்வரை நடக்கும்” என்றான்.மன்னன் இணங்குவதாக உறுதி கூறினான்.

செம்மொழி, பாணர்கள் பக்கம் திரும்பினான். “நீங்கள் அரசனைப் புகழ்ந்ததுடன் அமையவில்லை. அதற்கான பரிசு பெற்றதுடன் அமையவில்லை. அவனை வன்கண்மைக்கும், அநீதிக்கும் தூண்டினீர்கள். நீங்கள் காட்டிலுள்ள அம்மையப்பன் கோயிலுக்கு வாழ்நாள் முழுதும் பூசை செய்து பாடிக் காய்கனிகளை உண்பதாக இணங்கினால், ஆங்கார நடனம் நிற்கும். என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.

அவர்களும் இணங்கினார்கள்.

அதன்பின் செம்மொழி, விடுதிக்காரை னை ஏற இறங்க நோக்கினான்.

66

'அப்பனே, உன் குற்றம் எல்லாரையும்விடப் பெரிது.நீ என் விடுதியைப் பெருக்கி மெழுகும் வேலையை வாணாள் முழுதும் செய்து வர வேண்டும். அத்துடன் நாள்தோறும் காட்டுக் கோயிலுக்கு நான் தரும் பூசனைப் பொருளைக் கொண்டுபோய்க் கொடுத்து வரவேண்டும். இவற்றுக்கு இணங்காவிட்டால்,