உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

77

ஆங்கார நடனம் உன்னை விடாது" என்றான். அவனும் இணங்கினான்.

அரசன் ஆட்சியை மக்களிடம் ஒப்படைத்து அந்நாட்டைக் குடியரசாக்கினான். வெள்ளிக்கலத்தைச் செம்மொழியிடம் ஒப்படைத்துவிட்டுக் காடேகினான்.

விடுதிக்காரன் தன் செல்வத்தையும் செம்மொழியிடம் ஒப்படைத்தான். மண்கலத்தையும் திருப்பிக் கொடுத்தான். செம்மொழியின் விடுதிக்கும் காட்டுக் கோயிலுக்கும் வாணாள் முழுதும் தொண்டாற்றினான்.

பாணர்கள் - காட்டுக் கோயில் பூசை ஏற்று அதன் ஓதுவாராயினர்.

செம்மொழி புதிய குடியரசில் மக்களுக்கு வெள்ளிக் கலத்தையும், மண் கலத்தையும் பொதுவுடைமைப் பொருளாகப் பரிசளித்தான்.

பொற்கலம் அநீதி இழைப்பவர்க்கு அளிக்கப்படும் பரிசாக அம்மையப்பன் கோயிலிலேயே வைக்கப்பட்டது. அந்தப் பரிசை யாரும் பெற முன்வரவில்லை. அநீதியும் நடைபெறவில்லை.

அடக்குமுறை ஆட்சியும், பொறாமை ஆட்சியும் ஒழிந்தது. பொது உடைமை ஆட்சி பொதுளிற்று.