உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

அப்பாத்துரையம் - 36

கிடையாதென்று லான்ஸிலட் ஒழுங்குமுறை பேசித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்,” என்று வசைமொழி கூறினான். அது கேட்டதேலான்ஸிலட் தம் உறுதியைக் கைவிட்டுக் கவெயினை எதிர்த்துப் போருக்கு வந்தார். கவெயின் மீண்டும் மீண்டும் காயமுற்றுத் தோல்வியுற்றும் விடாது குணமடைந்தும் வந்து போரிட்டான். லான்ஸிலட்டும் அவமதித்த னன்று எண்ணாது காயமுற்ற போதெல்லாம் எதிர்க்காதுவிட்டார்.

மூன்றாம் முறை கவெயின் காயமுற்றுக் கிடக்கையில் மாட்ரெட், ஆர்தருக் கெதிராகப் பின்னம் சூழ்ச்சி செய்து, அவர் லான்ஸிலட்டுடன் போராடி மாண்டார் என்ற கதையைப் பரப்பித் தன்னையே அரசனென விளம்பரம் செய்து கொண்டு விட்டான். இச்செய்தி கேட்டதே ஆர்தர் காமிலட்டை நோக்கிச் சென்று மாட்ரெட்டை முறியடித்துத் துரத்தினார்.

பேராவல் பிடித்த மாட்ரெட் தோற்றும் தன் சூழ்ச்சி முயற்சிகளை விடவில்லை.கினிவீயரின் பழியைக் கேட்டது முதல் பிரிட்டன் மக்களில் பெரும்பாலோர் அவர் தமக்குச் செய்த நன்மைகளை மறந்து அவரை எதிர்க்கத் துணிந்தனர். ஆர்தர் வீரரால் முறியடிக்கப்பட்டவர்களும் அவர் ஆட்சியில் தம் தீய எண்ணங்கள் நிறைவேறப் பெறாது புழுங்கி வந்த கயவர்களும் மாட்ரெட்டுக்கு ஆதரவு தந்தனர். ஆகவே, ஆர்தர், மாட்ரெட்டை நாட்டின் பல இடங்களுக்கும் சென்று பல தடவை எதிர்த்துப் போராட வேண்டியதாயிற்று.

ஆர்தரால் முன் பன்னிரண்டு போர்களில் முறியடிக்கப்பட்டுப் பிரிட்டனை நாடாது ஓடிய ஸாக்ஸானியர் பிரிட்டனின் சீர்குலைவைக் கேள்வியுற்றுத் துணிகரமாக ஆங்காங்குப் படையிறக்கிக் கொள்ளையடித்தனர்.

ஆர்தர், பிரிட்டனின் நிலை கண்டு மனம் புழுங்கினார் அப்போது அவருக்கு முன் மெர்லின் கூறிய சொற்கள் நினைவிற்கு வந்தன. தன் முடிவு பிரிட்டனை விட்டுத் தான் வேறு உலகம் செல்லும்-நாள் இனி தொலைவிலில்லை னி என்பதை அவர் உய்த்துணர்ந்து கொண்டார். தம் வாழ்க்கைத் துணைவியாகிய கினிவீயர் எவ்வளவு நிலை தவறினாலும் அவளுக்கு இறுதியாக அறிவுரை தந்து மன்னித்து வரவேண்டும் என்ற பேரவா அவர் உள்ளத்தில் எழுந்தது.