சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5
107
கினிவீயர் மாற்று உருவில் சென்றாலும் அவளை மடத்துத் தலைவியும் துறவுப் பெண்களும் அறியாமலில்லை. ஆனால் உள்ளூர அவள்பால் அவர்கள் பரிவும் இரக்கமும் காண்டனர். அரசர் அவள் இருப்பிடம் வந்து அவளிடம் தன் சீரிய வாழ்க்கைக்கு அவள் செய்த இழுக்கை எடுத்துக் கூறிப் பின், “உன்னைக் குறைகூற நான் இங்கே வரவில்லை. உன்னை நான் மனமார மன்னித்து விட்டேன். ஆனால், கடவுளும் மன்னிக்கும்படி உன் மனத்தின் அழுக்கை நோன்பாலும் நல்லெண்ணத்தாலும் நற்பணியாலும் போக்கி, மேலுலகி லாயினும் என்னை வந்தடைக என்று கூறவே வந்தேன்,” என்ற சொல்லிச் சென்றார்.
மாட்ரெட் பல தடவை தோற்றாலும் படைகள் முற்றிலும் அழிவதற்கு முன்னமே அவற்றைப் பின் வாங்கியும் புதுப் படைகள் திரட்டியும் நாட்டின் மறுகோடி நோக்கிச் சென்று கொண்டிருந்தான். இறுதியில் பிரிட்டனின் தென்கீழ்க் கோடியில் உள்ள லயானிஸ் சென்றதும் மேலும் பின்வாங்க இடமின்றி இறுதிப் போராட்டத்தில் முனைந்து நின்றான்.
5
போருக்கு முந்திய இரவில் ஆர்தர் ஒரு கனவு கண்டார். அதில் கவேயின் வந்து ஆர்தரிடம் லான்ஸிலேட் வரும்வரை போரை நிறுத்தி வைக்கும்படி கோரினதாகக் கண்டு விழித்தார் பெடிவியர் முதலிய நண்பருடன் கலந்த பின் அதுவே நன்றெனக் கொண்டு மாட்ரெட்டுக்குச் செய்தி அனுப்பினார். மாட்ரெட்டுக்கும் தாமதம் செய்வது தனக்கு நல்லதென்றே தோன்றிற்று. பிரிட்டனில் பல பகுதிகளிலிருந்தும் உதவிப் படைகள் அனுப்பும்படி அவன் நண்பர்களை வேண்டியிருந் தான். ஆகவே அவனும் போர் நிறுத்தத்துக்கு இசைந்தான்.
ஆயினும், இப்போர் நிறுத்தம் பாம்புக்கும் கீரிக்கும் ஏற்பட்ட போர் நிறுத்தம் போலவே ருந்தது. இருதரப்பாரிடமும் உள்ள வெறுப்புடன் எதிரி சூழ்ச்சியால் நம்மை ஏமாற்றி விடுவானோ என்ற ஐயமும் நிறைந்து இருந்தது. இந்நிலைமையில் மாட்ரெட்டும் அவன் நண்பரும் ஆர்தர், அவர் நண்பர்கள் ஆகியவர்களுடன் இருதரப்புப் படைகளிடையிலும் வந்து போர் நிறுத்தக் கட்டுப்பாடுகளை அமைக்க முன் வந்தனர். அச்சமயம் தீவினையால் ஆர்தர் நண்பர் ஒருவர் காலில் ஓர்