உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(108) ||

அப்பாத்துரையம் - 36

அரவம் தீண்ட அதனைக் கொல்ல அவர் வாளுருவினார். ஐயமும் வெறுப்பும் நிறைந்த அச் சூழ்நிலையில் ஏன் என்றோ யார் என்றோ கேட்பவர் யார்? எதிரிகள் சூழ்ச்சி செய்தனர் என்று கொண்டு இருதரப்பாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து விழுந்தனர். பலர் போருக்கு முனைந்திராததனால் கவசம் கூட அணிய நேரமின்றிப் போரில் குதித்தனர். அச்சமயம் நாற்புறமும் உறைபனி வேறு சூழ்ந்ததால் யார் பகைவர் யார் நண்பர் என்று பிரித்தறியக் கூடாமல் பலர் தம் நண்பரையே கூட வெட்டித் தள்ளினர். ஆர்தர், தம் எக்ஸ்காலிபர்' என்ற வாளினால் சென்றவிடமெல்லாம் பிணக் குவியல்களை நிறைத்தார். ஆர்தரின் வட்டமேடையில் மீந்து நின்ற சிலரும் நெற் பயிரிடையே காட்டுப் பன்றிபோல் நாற்புறமும் அழிவு செய்தனர். ஆனால், போரில் எப்பக்கம் வெற்றி என்பதை அறிய முடியாதபடி போர்க்கள முற்றிலும் உறைபனி மூடியிருந்தது.

மாலையில் உறைபனி சற்றே விலகிற்று. அப்போது ஆர்தர் போர் நிலைமையை ஒருவாறு உணர்ந்து கொண்டார். கெரெயின்டும் அவனுடைய டெவன் நாட்டு வீரரும் இவ்வளவு குழப்பத்திடையேயும் அணிகுலையாமல் நின்று, இறுதித் தாக்குதலுக்குக் கச்சை கட்டுவதைக் கண்டு மகிழ்வுற்று அவர்கள் முன்புறம் தாக்கும் போது தாமும் தம் வீரரும் மறுபக்கம் சுற்றி வந்து தாக்கினார்.

மாட்ரெட் படையின் ஒரு பகுதி கெரெய்ன்ட் படைக்கு ஆற்றாது ஓடிற்று. கெரெய்ன்ட் அவர்களைத் துரத்திக் கொண் டோடுகையில் ஓர் அம்பு தலையணியின் பிளவொன்றினூடாக ஊடுருவிச் சென்று, அவனைக் கொன்றது. அவன் வீரர் அவன் வீழ்ச்சிக்குப் பழி வாங்கும் வண்ணம் படை வீரர்களைப் பின்னும் துரத்திக் கொண்டோடினர்.

ஆர்தர் என்றுமே எதிர்ப்பவரைத் தாக்குவதன்றி ஓடுபவரைத் துரத்துவதில்லை. ஒரு சில வீரருடன் வெற்றி வீ ரராய், ஆயின் வீரரனைவரையும் இழந்தோமே என் துயரத்துடன் அவர் நின்றார். அச்சமயம் மாட்ரெட் மறைவிலிருந்து வெளிவரவே இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். நெடுநேரம் போர் புரிந்து இருவரும் ஒருவரை ஒருவர் படுகாயப்படுத்தினர். இருவரும் சோர்ந்து விழப்போகும்