உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0|--

4

அப்பாத்துரையம் - 36

பல

அவனைத் தன்னிச்சைப்படி இயக்கியும் வந்தாள். மேலும் பெண்கல்வி,பெண்கள் நலப்பணி ஆகியவற்றில் மனஞ்செலுத்தி அவ்வுயர் குறிக்கோள்களின் பெயரால் தந்தையிடமிருந்து எல்லைப்புறக் காட்டு மாளிகை ஒன்றைத் தனக்கெனப்பெற்று, அதில் மாதர் பல்கலைக் கழகம் ஒன்றை அமைத்தாள். அவளது அரிய செயலாற்றலாலும் ஆர்வத்தாலும் அவள் பெண்டிரைத் திரட்டி அதனை ஒரு சிறு ‘அல்லி அரசி’ ஆட்சியாக மாற்றினாள். அதில் தலைவர், ஆசிரியர், எழுத்தாளர், மாணவியர் ஆகியவர் மட்டுமன்றிக் காவலர், ஏவலர், பணியாட்கள் முதலிய யாவரும் பெண்டிராகவே அமர்த்தப் பெற்றனர். ஆடவர் எவரும் உள்ளே வரக் கூடாதென்றும், வந்தால் வருபவரும், வர விடுபவரும் துணைபுரிபவரும், இணங் குபவரும், அச்செய்தியறிந்து உரையாதவரும் யாவரும் தூக்கலிடப்படுவர் என்றும் சட்டம் இயற்றினாள்.

மணப்பேச்சும் இளவரசன் வருகையும்

இளவரசனுக்கு மணவயது வந்ததும், அவன் தந்தை, தன் நண்பனாகிய காமா அரசனுக்கு ஓலை போக்கினான். மண வுறுதியை நிறைவேற்றித் தரும்படி கோரினான். காமா அரசனுக்கும் இது முற்றும் உடன்பாடே. ஆனாலும், ஐடா அதனைச் செவியேற்கவும் மறுத்து விட்டாள். தான் என்றும் ஆடவர் உலகுடன் தொடர்பிலாக் கன்னியுலக அரசியாகவே காலங்கழிக்க முடிவு செய்து விட்டதாகவும் கூறியனுப்பி விட்டாள். வேறு வகையின்றி மன்னன் காமா தன் விருப்பத்தையும் நண்பன் விருப்பத்தையும் தன்னால் நிறைவேற்ற இயலாமைக்கு வருந்துவதாகக் கூறியனுப்பினான்.

புதுமை வாய்ந்த இச்செய்தியை, ‘மன்னருக்கு இயல்பான அரசியல் சூழ்ச்சிப் பசப்புரை', என்று வடபுலவேந்தனும் அமைச்சரும் எண்ணியதில் வியப்பில்லை. தம்மை அவமதித்த அரசின்மீது போருக்கெழுவதென்று அவர்கள் ஏற்பாடு செய்தனர்.

இளவரசி ஐடாவைப் பற்றியிருந்த குறிக்கோள் வாழ்வாகிய காற்றின் ஒரு பகுதி, இளவரசனையும் தாக்கியிருந்தது. ஆகவே, அவன் தந்தையிடம் மன்றாடித் "தந்தையே! படபடப்பு