உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

5

வேண்டாம். இச்செய்தி புதுமை வாய்ந்ததேயாயினும், இதில் உண்மை இருக்கவும் கூடும். ஆகவே, முதலில் நான் நேரில் சென்று உண்மை அறிந்து வருகிறேன்." என்று கூறினான். அரசனும் ஒருவாறு உடன்பட, அவன் தன் தோழர்களான ஸிரில், பிளாரியன் ஆகியவர்களுடன் புறப்பட்டான்.

இளவரசனும் காமா அரசனும்

காமா அரசன், இளவரசனை அன்புடன் வரவேற்றுப் பாராட்டினான். பின் அவன் தன் புதல்வி இருக்குமிடம் அறிவித்து, “உன்னால் அவள் மனதை மாற்ற முடியுமானால், யாவரினும் நானே மகிழ்ச்சியடைவேன். ஆயினும் என் செய்வது? அவள் தன் வாழ்வைத் தன் மதியாலேயே நெரித்துக் கொண்டிருக் கிறாளே!” என்றான்.

இளவரசன், “அரசே! முயற்சியால் முடியாத தொன் றில்லை. தாம் உதவுவதானால். நெறிதவறிய நன்னோக்கத்தை இணக்கமான நன்மதியால் முயன்று வெல்வேன்," என்று கூறினான்.

அரசன் அவன் விருப்பப்படியே இளவரசனை வரவேற்கு மாறு புதல்விக்குக் கடிதம் எழுதித் தந்து இளவரசனை வாழ்த்தியனுப்பினான்.

புதிய மாணவியர்

இளவரசியின் பல்கலைக் கழகத்திற்குக் காவலராயிருந்த பெண்வீரர் ஆடவரினும் வலிதான உடற்கட்டமைந்தவரா யிருந்தனர். அவர்கள் இளவரசர் குழுவினரைத் தடைசெய்து வெளியே நிறுத்தியதுடன், “விரைவில் பிற பெண்டிர் கண் படாமற் போய்விடாவிட்டால், பல்கலைக்கழகச் சட்டப்படி தூக்கலிடப்படுவீர்”, என்றும் எச்சரித்து அச்சுறுத்தினர்.

மூவரும் ஒதுங்கிச் சென்று தம் நிலையை ஆராய்ந்தனர். ஸிரில் அவர்கட்கு ஒரு புதுவழி கூறினான். அவன் தமக்கை ஸைக் பெருமாட்டி கைம் பெண்ணானபின் இளவரசியின் பெண்கள் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆசிரியையாய்ப் பணியாற்றி வந்தாள். பெண்ணுருவில் அனைவரும் உட்சென்று புது மாணவியராய்