உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

-

அப்பாத்துரையம் - 36

அவள் உதவி பெறலாம் என்பதே ஸிரிலின் கருத்து. இதனை அனைவரும் ஏற்கவே, அங்ஙனமே அனைவரும் பெண்ணுருவில் உட்சென்று புது மாணவியராகச் சேர்க்கப்பட்டனர். அவர்கள் விரும்பியபடி ஸைக் பெருமாட்டியே அவர்கள் பயிற்சி ஆசிரியை யாகவும் அமைய இடமேற் பட்டது.

ஸிரிலும் ஸைக்கும்

முதல் வகுப்பின் முடிவிலேயே ஆசிரியை, தன் புதிய மாணவருள் ஒருவர் தன் உடன்பிறந்தான் என்று கண்டு கொண்டாள். அவனை அவள் தனியே அழைத்து, “இதென்ன ஸிரில்! இப்படிப் பெரிய இடரில் மாட்டிக் கொண்டு என்னையும் இடையூற்றுக்காளாக்கி விட்டாய். பல்கலைக்கழகச் சட்டப்படி நான் உன்னைக் காட்டிக் கொடுத்து உயிரை வாங்க வேண்டும். அல்லது அது செய்யாத குற்றத்துக்காளாகி என் உயிரையும் விட வேண்டும்,” என்றாள்.

ஸிரில் துணிவுடன், “உன் உயிரை இழக்கவேண்டாம். என் உயிரை வாங்கிவிடு. அது போதாவிட்டால், என்னுடன் இருக்கும் இளவரசர், நண்பர் இருவர் உயிர்கள் வேறு இருக்கின்றன. எங்கள் உயிரை வாங்கிவிட்டு வீரப் பெண்குல வீரமாதராக வாழ்வாயாக,” என்றான்.

‘உன் வழக்கமான குறும்புப் பேச்சுக்கு இது இடமுமல்ல; சமயமுமல்ல; ஸிரில்! என் மீது பொறாமையுற்று என்னை ஒழிக்க வகைத்தேடிக் காண்டிருக்கும் பிளான்ஷிப் பெருமாட்டிக்கு இது தெரிந்தால், என் பெயருக்கும் உங்கள் உயிருக்கும் ஒருங்கே உலைவைத்து விடுவாளே! என் செய்வது!” என்று கை விரித்து வெதும்பினாள் ஸைக்

மெலிஸ்ஸாவும் பிளான்ஷிப் பெருமாட்டியும்

"

பிளான்ஷிப் பெருமாட்டியின் புதல்வி மெலிஸ்ஸா, உள்ளே வந்து "என் தாய் தங்களை அழைக்கிறார்கள்,” என்று கூறவே, அனைவரும் திகிலடைந்தனர். ஸைக் அவளிடம், “நீ யாவும் கேட்டுக் கொண்டுதானே வந்தாய்,” என்றாள்.