உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

7

மெலிஸ்ஸா, "அம்மணி, நான் வேண்டுமென்று கேட்க வில்லை. நான் கேட்டுவிட்டதற்காக மட்டுமே நீங்கள் அஞ்சவும் வேண்டாம்.நானாக உங்களுக்குத் துயர் விளைக்க மாட்டேன். ஆனால், இவர்கள் யாவர் கண்களிலும் படாமலிருந்து இரவே ஓடிவிடச் செய்ய வேண்டும்," என்றாள். ஸைக் சிறிதளவு தேற்றமடைந்து அப்படியே செய்வதாகக் கூறினாள்.

ஆனால், மறுநாள் பொழுது விடியுமுன்பே மெலிஸ்ஸா பரபரப்புடன் ஓடோடி வந்தாள். அவள் கண்கள் கொவ்வைப் பழங்கள்போல் சிவந்து வீங்கியிருந்தன. மூவரும் இன்னும் ஓடிவிடாதது கண்டு அவள், “உடனே ஓடிவிடுங்கள். என் தாய் தானே யாவற்றையும் உய்த்தறிந்து கொண்டு என்னையும் அச்சுறுத்தி யாவும் வெளியிடச் செய்து விட்டாள். அவள் பகைமையுணர்ச்சிதான் உங்கட்குத் தெரியுமே. அவள் இப்போதே இளவரசியிடம் போகவிருக்கிறாள். ஆகவே, உடனே ஓடிவிடுங்கள்,” என்றாள்.

நண்பர் ஓட ஒருப்பட்டனர். ஆனால் ஸிரில், “நான் உயிருக் கஞ்சவில்லை. பிளான்ஷிப் பெருமாட்டியைக் கூட நான் வசப்படுத்த முடியும். என்னைத் தடுக்க வேண்டாம்.” என்று கூறிச் சரேலென்றகன்றான். நல்ல காலமாக அவனால் பிளான்ஷிப் பெருமாட்டியை வசப்படுத்தவும் முடிந்தது. தம்மைக் காப்பாற்றுவதனால், தான் இளவரசனிடம் சொல்லி இன்னொரு பல்கலைக் கழகமே உருவாக்கிப் பிளான்ஷிப் பெருமாட்டிக்குத் தருவதாக அவன் உறுதியளித்தான். அவளும் அதற்கிணங்கினாள்.

வேட்டையும் விபரீதமும்

புயல் இங்ஙனம் தற்காலிகமாக ஓய்வுபெற்றது. இளவரசி புதிய மாணவருடனும் பிறருடனும் அன்று வேட்டையாடச் சென்றாள். அதன் முடிவில் அனைவரும் குடித்தாடிப் பாடியிருந்தனர். ஸிரில் எளிதில் பெண்குரல் பூண்டு பாடியாடி யாவரையும் களிப்பில் மூழ்குவித்தான். ஆயினும் அவன் தன் எக்களிப்பிடையே தன்னை மறந்து பெண்கள் பாடத்துணியாப் பாட்டுகளைப் பாடலானான். இளவரசியின் ஆணையால் பலர் தடுத்தும் அவன் புறக்கணிக்கவே, இளவரசன் சினமூண்டு தானும்