உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

அப்பாத்துரையம் - 36

அடக்குகிறேன்

தன்னை மறந்து, "இளைஞனே, உன் துடுக்கை அட பார்," என்று அவனைத் தாக்கலானான்.

இளைஞனே!' என்ற சொல் கொஞ்சநஞ்சமிருந்த மறைப்பையும் அகற்றிவிட்டது. யாவருங் கலகலத்து நின்றனர். இளவரசி கண்சிவக்க, உடல்துடிக்க எழுந்து, பெண்டிர் யாவரும் பல்கலைக்கழகத்துக்கு விரைக. இவ்வாண்பதர்களின் வாடை வேண்டாம், என்று கூறித்தானும் குதிரை மீதேறிக் காற்றென விரைந்தாள். இளைஞர் மட்டுமே வேட்டுவப்பாடியில் மீந்தனர்.

ஆற்றில் விழுந்த இளவரசி

அவர்கள் ஒருவருடன் ஒருவர் பேச முனையுமுன் மற்றொருமுறை பெண்கள் பக்கமிருந்து பெருங்கூச்சல் கேட்டது. கடுஞ்சீற்றத்துடன் குதிரைமீது தாவிச் சென்ற இளவரசியை வழக்கத்திற்கு மாறாகக் கலவரங் கண்ட குதிரை தூக்கித் தள்ளவே, பாலத்தின் கீழ் ஓடிய ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். இதனையுணர்ந்த இளவரசன் தன் பெண்ணுடையிலே ஆற்றில் குதித்து நீந்திச் சென்று அவளைக் கரை சேர்த்தான். பெண்டிர் அவளுக்கு ஆவன செய்து தேற்றினர்.

இளவரசிக்கு உணர்வு வந்தபின் தன்னை இளவரசனேதான் காப்பாற்றினான் என்று அறிந்துங்கூட அவள் தன் உறுதியிலிருந்து மீறவில்லை; சீற்றமும் தணியவில்லை; இளவரசனும் அதுவரை காத்திராமல் தன் வேலை முடிந்ததும் வெளியே சென்று விட்டான். புறங்காட்டில் பிளாரியனுடன் அவன் பேசிக் கொண்டிருப்பதற்குள் இளவரசியின் ஏவற் பெண்டிர் அவர்களைக் கைப்பற்றியிழுத்துச் சென்றனர்.

அப்போது இளவரசி தன் உயர் இருக்கையில் கொலுவிருந்து குற்ற விசாரணை நடத்திக் கொண்டிருந்தாள். ஆற்றில் நனைந்த அவள் தலைமயிரை அப்போதும் இரு பணிப்பெண்கள் கோதிக்கொண்டு நின்றனர். அவள் காலடியில் ஸைக்கின் குழந்தை கிடந்தது. பிளான்ஷிப் பெருமாட்டி முன்னின்று தன் செயலுக்கு விளக்கம் கூறிக் கொண்டிருந்தாள். தனக்கெதிராக ஸைக் பெருமாட்டிக்கு உயர்வு கொடுக்கப்பட்டதனால்தான் தான் மாறாக நடந்து கொண்டதாகக் கூறி,அவள் இளவரசியையே துணிந் தெதிர்த்து எதிர்க் குற்றஞ்சாட்டிக் கடிந்தாள்.