உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

9

வழக்கு முடிவில் இளவரசி பிளான்ஷியைப் பல்கலைக் கழகத் திலிருந்து நீக்குவதனுடன் அமைந்தாள். ஸைக் பெருமாட்டியை விலகும்படி கூறியதுடனில்லாது குழந்தையைத் தன்னிடமே கொடுத்துவிடும்படிப் பணித்தாள். பிளான்ஷிப் பெருமாட்டி மெலிஸாவை அழைத்துக் கொண்டு வெளியேற இருக்கும் தறுவாயில் கழக அஞ்சற்பெண்டு இரு கடிதங்களை இளவரசி முன் நீட்டினாள். இளவரசி அதை வாசித்ததுமே அவள் முகம் சிவந்தது. அவள், அவைகளை இளவரசனை நோக்கி வீசியெறிந்தாள்.

கடிதங்கள்

அவைகளில் ஒன்று மன்னன் காமா, மகளுக்கு எழுதியது. மற்றது வடபுலனால் எழுதப்பெற்று அத்துடன் வைக்கப் பெற்றிருந்தது.

மன்னன் காமா, கடிதத்தில் தன் நிலைமையை புதல்விக்கு விளக்கிக் கூறியிருந்தான்."அருமைப் புதல்வியே! இளவரசனைக் கடிதத்துடன் உன்னிடமனுப்பியபோது உள்ளே நுழையும் ஆடவருக்கெல்லாந் தூக்குத் தண்டனையென்ற உன் பல்கலைக் கழகத்தின் புதுமை வாய்ந்த சட்டத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆயினும், அரசமதிப்புடைய அவனுக்குத் தீங்கு நேராவண்ணம் நானும் பின்னால் புறப்பட்டு வந்து கொண்டிருந்தேன். ஆனால், எதிர்பாராமல் வடபுல வேந்தரின் படையெடுப்பு வீரர் கைப்பட்டு நான் இப்போது அவ்வரசர் பாதுகாப்பிலிருக்கிறேன். அவர் நம் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கிறார். உன் பல்கலைக் கழகமும் அவரால் முற்றுகையிடப் பட்டுள்ளது. அவர் கடிதமும் காண்," என்பதே அவர் கடிதம்.

இளவரசன் தந்தையின் கடிதம் இதனினும் அச்சுறுத்துடைய தாயிருந்தது. “எம் புதல்வன் அங்கே இருக்கிறதாக அறிகிறேன். அவனுக்கு மயிரிழையளவும் தீங்கு செய்யத் துணியாதிருக்கக் கடவாய். அவன் பாதுகாப்பாக என்னிடம் அனுப்பப்படுவதுடன் முன்னைய ஒப்பந்தப்படி அவனை நீ மணந்து கொள்ள வேண்டும். இதனை உடனடியாகச் செய்யாவிடில் இன்றே உன் மாளிகை அழிக்கப்படும்.”