உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளவரசியின் திடம்

அப்பாத்துரையம் - 36

இளவரசன் கடிதங்களை இளவரசியிடம் கொடுத்து விட்டுத்தான் என்றுமே அவள் மீது காதல் கொண்டு அவள் படத்தைப் போற்றி வைத்திருப்பதாகக் கூறி அதனை நெஞ்சகத்திலிருந்து எடுத்துக் காட்டினான். அமைந்த ஆனால் கடுமையான தோற்றத்துடன் அவன் பக்கம் திரும்பி, “நீர் பெருந் தன்மையுடையவர்; அதற்காக உம்மை மதிக்கிறோம். எனக்குப் பேருதவி செய்தவர்; அதற்காக நன்றி. நீர் பெண் உடையில் கூட நயநாகரிகமும், நல் தோற்றமும் உடையவர்தாம். அதற்காகப் பாராட்டு ஆனால், மணிமுடிக்குள் வருவதானால் கூட, நான் உம்மை மணக்க முடியாது. எம் தந்தை உம் தந்தையிடம் பிணையமாகச் சிக்கியிராவிட்டால் கால்லக்கூடப் பின்வாங்கியிருக்க மாட்டேன். ஆகவே, இனி, என் கண்ணில் விழிக்க வேண்டாம். வெளியே போகலாம்," என்றாள்.

போரும் ஒப்பந்தமும்

உலகின் செல்வமுழுவதும்

உம்மைக்

உம்

அவள் ஆணைப்படி ஏவற்பெண்டிர் இளவரசரையும் தோழரையும் வெளியே அனுப்பினர். வடபுலப் படைகள் வழிவிட அவர்கள் இரண்டரசரும் இருக்குமிடத்திற்குக் காண்டு வரப்பட்டனர். பெண்ணுடையில் அவலத் தோற்றத்துடன் வந்த அவர்களையும் சிறப்பாக இளவரசரையும் கண்டு பெருமக்கள் மகிழ்ச்சியிடையில் கூட வருந்தாதிருக்க முடியவில்லை. ஏனெனில், அவர்கள் பெண்ணுடைகூடத் தாறுமாறாகவும் கிழிந்தும் சேறுபடிந்தும் இருந்தது.

ஆனால், இதற்குள் இளவரசியின் உடன்பிறந்தார்கள் மூவரும் வேறு படைதிரட்டிக் கொண்டு தந்தையை மீட்கவும் தங்கைக்கு உதவவும் முன்வந்தனர். இரு படைகளும் மோதுமுன் இளவரசன் இடையிட்டு, "எங்களால் வந்த இடருக்கு நாங்களே வகை வகுக்கிறோம். இளவரசிக்காக அவள் உடன்பிறந்தார் மூவரும் போரிடட்டும். அவர்களுடன் நானும் என் தோழரும் போரிடுவோம். வெற்றி அவர்க்காயின் காமா மன்னனை அனுப்பி விடுக; வெற்றி நமதாயின் அவர்கள் இளவரசியை மணஞ்செய்து கொடுக்க இணங்கட்டும்,” என்றான்.