உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

11

தன் கட்சி வெல்லும் என்ற உறுதியில் இளவரசியும், தாம் வெல்வோம் என்ற உறுதியில் உடன்பிறந்தார்களும் இதனை ஏற்றனர்.

இளவரசன் வீழ்ச்சி

இருசாராரும் நெடுநேரம் சரிநிகராகப் போராடினர். ஆனால், இறுதியில் வடபுலப்படை பின்னடைந்து சரிந்தது. உடன் பிறந்தாரும் தோழருமாக மோதினர். இளவரசன் தோழரும் களைத்துப் போயினர். உடன் பிறந்தாருள் மூத்தோனாகிய அராக் ாகிய அராக்கு இளவரசன் மீது பாய்ந்தான். இளவரசியும் தன் அண்ணனை இச்சமயம் நேரிடையாக ஊக்கினாள். இளவரசன் படுகாயமுற்று வீழ்ந்தான். இளவரசன் மாண்டான் என்ற ஒலி எங்கும் எழுந்தது.

வடபுல வேந்தன் இளவரசன் உடல்மீது சார்ந்து கதறினான், அரற்றினான், மறுகி மறுகிப் புலம்பினான்.

உடன்

இளவரசியோ வெற்றி வெறியுடன் தன் பிறந்தார்களைப் பெண்கள் வீரங்காக்க வந்த பெருந்தகைகள் எனப் போற்றி வரவேற்றதுடன், அவர்கள் காயம் ஆறும்படி பல்கலைக் கழக ஒழுங்கையே தளர்த்தி வைத்து அங்கே அவர்களைப் பெண்கள் பண்டுவம் பார்க்கும்படி பணித்தாள். விடுதலை வீரர்களுக்கான வெற்றியாரவாரத்துடன் அவர்கள் ட்டுச் செல்லும்படியும் ஆணை தரப்பட்டது.

மனமாற்றம்

ஆனால், அவள் வெற்றியுடன் பின் செல்லுமளவில் வடபுலமன்னன் அழுகை கேட்டுத் திரும்பினாள். தந்தை துயரையும் பிணம் போல் கிடந்த ளைஞனையும் கண்ட அவள்மனம் சிறிது கனிவுற்றது. அவள் இறங்கி அவன் நெஞ்சில் கைவைத்துப் பார்த்தாள். நாடி மென்மையாகத் துடிப்பதை உணர்ந்தும், மகிழ்ச்சியுடனும் ஆறுதலுடனும், “அவன் சாகவில்லை; அரசே வருந்த வேண்டாம். என் உடன் பிறந்தார்களுடன் பல்கலைக் கழகத்திலேயே அவனைக் கவனித்து அவன் உயிரை மீட்கிறேன். என் உயிரை மீட்டவனுக்கு நான் கட்டாயம் இந்த உதவி செய்வேன்," என்று கூறினாள்.