உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

அப்பாத்துரையம் - 36

அவள் குரல் கேட்டுச் சற்றே உயிர் ஊக்கம் பெற்ற இளவரசன் அவளைக் கடிந்து, “என்பால் உன் நன்றி எதுவும் தேவையில்லை. நன்றி காட்டினால், ஸைக் பெருமாட்டியின் பச்சை மதலையிடம் காட்டி, அதனை அதன் தாயிடம் சேர். நேரடியாக உன்னால் கொடுக்க முடியாவிட்டால் நான் கொடுக்கிறேன்," என்றான். பக்கத்திலிருந்த குழந்தையை இளவரசி முத்தமிட்டு அவனிடம் தந்தாள். அழுது

கொண்டிருந்த ஸைக்கினிடம் அவன் கொடுப்பதை அவள் தடுக்கவில்லை. அவள் மனக்கோட்டை வாயில் இன்னும் சற்று அகன்றது. அவள் இளவரசனை மட்டுமின்றி, காயமுற்ற வடபுல வீரர் யாவரையும் வடபுலவேந்தனுடன் பல்கலைக் கழகத்துள் இட்டுச் சென்று எல்லாரையும் கவனிக்கும்படி தன் ஏவற் பெண்டிருக்குப் பணியிட்டாள்.

இளவரசனை ஐடாவே கவனித்தல்

ஸைக் பெருமாட்டி பிளாரியனையும், மெலிஸாஸி ரிலையும் பேணிக் கவனித்தனர். ஐடா தானே இளவரசனை உடனிருந்து கவனித்தாள். உணர்விழந்து நோய் வெறியுடனிருந்த இளவரசன் பல தடவை மருந்து தரும் அவள் கையை உதறியும், அவள் மீது தாக்கியும், பல வகையில் பிதற்றியும், அவள் அன்னையினும் கனிவுடன் அவனைக் கவனித்தாள். இரவு பகல் அவள் தான் ஊன் உண்ணாது அவனை ஊட்டினாள். தன் நலமறுத்து அவன் நலத்திற் கருத்தூன்றினாள்.

ஒருநாள் இளவரசன் வழக்கத்திற்கு மாறான நீண்ட நேர உறக்கத்தில் ஆழ்ந்துகிடந்தான். அவன் காயங்களும் நோவும் காய்ச்சலும் ஆறிவிட்டன. ஆனால், உடல் வலுவிழந்து நாடிகள் தளர்ந்து அவன் உடல் உயிருக்குப் போராடியது. இளவரசி கவலையே வடிவாக அருகில் அமர்ந்து, தன் உயிர் தன் கைவரக் காத்திருக்கும் அரையுயிர்ச் சிலைபோல் காத்திருந்தாள்.

வேடிக்கையான தண்டனை

இளவரசனுக்கு வேண்டும் பணிகளைப் பெண்களுக்கே யுரிய மென்மைக் கனிவுடன் ஆற்றினாள். அவள் ஒவ்வோரசை விலும் அவள் உள்ளத்தில் அன்பு குடிகொண்டு விட்டதை