உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 ||

66

அப்பாத்துரையம் - 36

'இல்லை! நான் இனியும் பாசி சேகரிக்க வரத்தான் எண்ணுகிறேன். ஆனால் எனக்காக அல்ல. உனக்காக” என்றான்.

அவளுக்கு அவன் கூறியதன் பொருள் விளங்கவில்லை. ஆனால், அவன் இன்னும் முற்றிலும் நலமடையாத நிலையில், அவனுடன் நீடித்து உரையாட அவள் விரும்பவில்லை. அத்துடன் பாட்டன் தனியே இருப்பதையும் நினைத்துக் கொண்டு அவள் விடைபெற்றுத் திரும்பினாள்.

ஃகன்லிஃவ் குடும்பத்தினர் இத்தடவை விளக்குகளுடன் இரண்டு பணியாட்களையும் உடன் அனுப்பினர்.அவள் “எனக்கு ஏன் இத்தகைய துணை?” என்று மறுத்தும் அவர்கள் அவளுடன் பாறை வீடுவரை வந்து சென்றனர்.

ன்

அவள் உள்ளம் இரவெல்லாம் உறங்காமல் ஃபார்ட்டியின் சொற்களையே நினைத்து வட்டமிட்டது. ஆனால், அவள் மகிழ்ச்சியைவிடக் கிழவன் மகிழ்ச்சி பெரிதாயிருந்தது. அவன் தன் அரைத்தூக்கத்திடையே “ஆ, நான் என்றும் மறக்க மாட்டேன்'

என்றான்.

""

மாலி அவனை எழுப்பி, “என்ன தாத்தா! மறக்கமாட்டேன் என்கிறீர்கள்?” என்றாள்.

அவன் சிரித்துக் கொண்டு மீண்டும் படுத்து உறங்கினான். ஆனால் ‘ஆ, நான் என்றும் மறக்க மாட்டேன்' என்ற பல்லவி அவள் கண்ணயரும் வரை கேட்டது.

பிளவு தீர்ந்தது-ஃபார்ட்டி உடல் நலம்பெற, அவனை ஃகன்லிஃவ் மாளிகையில் தங்க வைப்பது கடினமாயிற்று. அவன் மாலியின் நினைவைத் தவிர வேறெதிலும் கருத்தற்றவனானான். தாய் தந்தையரும் இப்போது அவனைத் தடுக்கவில்லை. மாலிக்கே அவன் உயிர் உரியது என்று அவர்கள் கருதினர்.

ஒருநாள் திருவாட்டி ஃகன்லிஃவ் மகனை நோக்கி, "ஃபார்ட்டி! மாலியை நான் இங்கே கொண்டுவந்துவிட எண்ணுகிறேன்” என்றாள்.

“ஏனம்மா?”

66

"உன்னை இங்கே தங்க வைக்கத்தான். அத்துடன் மாலியிடம் எனக்கும் இப்போது பாசம் ஏற்பட்டிருக்கிறது.